Advertisment

IRCTC Ticket Booking Concession Rules: இந்த ரூல்ஸைப் பின்பற்றினால் சலுகையில் டிரெயின் டிக்கெட் நிச்சயம்

concession rules basic fare, surcharge, reservation fee details here: மூத்த குடிமக்களைப் பொறுத்தவரை, டிக்கெட் வாங்கும் போது வயதுக்கு ஆதாரம் தேவையில்லை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
IRCTC booking concession rules

Indian Railway Train Ticket Concession: மாற்றுத்திறனாளிகள், மாணவர்கள், போரில் கணவனை இழந்தவர்கள், மூத்த குடிமக்கள், விவசாயிகள், கலைஞர்கள் மற்றும் விளையாட்டு நபர்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட பயணிகளுக்கு ரயில் டிக்கெட்டுகளில் சலுகைகளை இந்திய ரயில்வே வழங்குகிறது. இந்திய ரயில்வே மொத்தம் 1,08,706 கிலோமீட்டர் அகல பாதை, மீட்டர் கேஜ் மற்றும் குறுகிய பாதைகளை உள்ளடக்கி தினமும் 11,000 ரயில்களை இயக்குகிறது. இயக்கப்படும் 11,000 ரயில்களில் 7,000 பயணிகள் ரயில்கள் என்று இந்திய ரயில்வேயின் வலைத்தளமான www.indianrailways.gov.in தெரிவித்துள்ளது.

Advertisment

எந்தவொரு பயணத்திற்கும் இந்திய ரயில்வே சலுகை விதிகள் வழங்கப்படவில்லை, அதற்கான செலவை மத்திய மற்றும் மாநில அரசு ஏற்கிறது என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. டிக்கெட்டை முன்பதிவு செய்யும் போது பயணிகள் தாங்கள் பெற விரும்பும் சலுகையின் வகையை ஐ.ஆர்.சி.டி.சி-யின் irctc.co.in அல்லது டிக்கெட் கவுண்டரில் குறிப்பிட வேண்டும்.

 IRCTC booking concession rules IRCTC booking concession rules

 IRCTC booking concession rules IRCTC booking concession rules

 IRCTC booking concession rules IRCTC booking concession rules

 IRCTC booking concession rules IRCTC booking concession rules

 

 IRCTC booking concession rules

 IRCTC booking concession rules IRCTC booking concession rules

 IRCTC booking concession rules IRCTC booking concession rules

 IRCTC booking concession rules IRCTC booking concession rules

மேற்கூறியுள்ள சலுகைகளைப் பெறுவதற்கான விதிகள்

இந்திய ரயில்வேயின் சலுகை அடிப்படை கட்டணத்திற்கு மட்டுமே பொருந்தும். சூப்பர்ஃபாஸ்ட் கூடுதல் கட்டணம், முன்பதிவு கட்டணம் போன்ற பிற கட்டணங்களுக்கு பொருந்தாது என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

ராஜதானி, சதாப்தி அல்லது ஜான் சதாப்தி ரயில்களைப் பொறுத்தவரை, (கேட்டரிங் கட்டணம் உட்பட) சலுகை ஏற்றுக்கொள்ளப்படும். மாணவர்கள், பார்வையற்றோர், எலும்பு சார்ந்த பிரச்னைகள் உள்ளவர்கள், ஊனமுற்றோர், காசநோய் மற்றும் புற்றுநோய் நோயாளிகள் தவிர, மற்றவர்களுக்கு குறைந்தபட்சம் 300 கிலோமீட்டர் தூரத்திற்கு மட்டும் தான் சலுகைகள் பொருந்தும்.

ஒருவர் ஒரே வகையான சலுகையை மட்டும் தான் பயன்படுத்த முடியும். ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட சலுகைகளை ஒருவரால் பயன்படுத்திக் கொள்ள முடியாது. சீனியர் சிட்டிசன்கள் தவிர, சலுகை பெறுவரிடம் தேவையான சான்றிதழ்களை இந்திய ரயில்வே சரிபார்க்கும்.

மூத்த குடிமக்களைப் பொறுத்தவரை, டிக்கெட் வாங்கும் போது வயதுக்கு ஆதாரம் தேவையில்லை. ரிசர்வேசன் படிவத்தில் விருப்பம் தெரிவித்தால், சலுகை டிக்கெட்டுகள் வழங்கப்படும். இருப்பினும், அவர்கள் தங்கள் வயது அல்லது பிறந்த தேதியைக் காட்டும் சில ஆவண சான்றுகளை எடுத்துச் செல்ல வேண்டும். பயணத்தின் போது ரயில்வே அதிகாரிகள் கேட்டால், அதை காண்பித்து ஒத்துழைக்க வேண்டும்.

சலுகை டிக்கெட்டை வைத்திருப்பவர் உயர் வகுப்பிற்கான மீத தொகையை செலுத்தினால் கூட உயர் வகுப்பிற்கு மாற அனுமதிக்கப்பட மாட்டார்.

 

 

 

 

 

 

 

 

 

Irctc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment