ரயில்வேயில் ரத்து செய்யப்படும் டிக்கெட்டுகளுக்கான பணத்தைத் வங்கி கணக்கில் திரும்ப செலுத்தும் கால அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலமாக, ரயில் டிக்கெட் புக்கிங் செய்து பயணம் செய்யும் பழக்கம் மக்களிடையே அதிகரித்துள்ளது.
அப்படி முன்பதிவு செய்து, பயணம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டால், டிக்கெட்டை ரத்து செய்ய நினைக்கிறோம். அப்படி ரத்து செய்தால் டிக்கெட் பணம் திரும்பக் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுகிறது. மேலும், டிக்கெட்டை எப்போது கேன்சல் செய்தால் டிக்கெட் பணம் திரும்பக் கிடைக்கும் என்ற குழப்பம் நிலவுகிறது.
இதைத் தவிர ஆன்லைன் டிக்கெட் புக்கிங்கில் பெரும்பாலான சமயங்களில் கன்ஃபார்ம் சீட் கிடைப்பதில்லை. வெய்ட்டிங் லிஸ்ட் வந்துவிடும். அதேபோல, ரயில் டிக்கெட் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுவிடும். அதற்கான ரீஃபண்ட் தொகை கிடைக்குமா கிடைக்காதா என்ற சந்தேகம் சில பயணிகளிடம் இருக்கும்.
இதுபோன்ற சந்தேகங்களுக்கு அரசு தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
பணம் எடுக்கப்பட்டு முன்பதிவு செய்யப்படாவிட்டால், அதற்கு மறுநாள் தானியங்கி முறையில் பணத்தைத் திரும்பப் பெறும் செயல்முறையை IRCTC தொடங்குகிறது.
பொதுவாக பின்வரும் பரிவர்த்தனை முறையின்படி பணம் திரும்பப் பெறுவதற்கான கால அளவு அமையும்.
நெட் பேங்கிங், வாலட், கேஷ் அட்டைப் பரிவர்த்தனைகளுக்கு 3 முதல் 4 வேலை நாட்களுக்குள் பணம் திரும்ப செலுத்தப்படும்.
கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு 6 முதல் 7 நாட்களுக்குள் திரும்ப செலுத்தப்படும். இந்த தகவலை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“