IRCTC ticket cancellation charges in Tamil: நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவரா? இந்த செய்தி உங்களுக்கானது தான். இந்திய ரயில்வே நீங்கள் முன்பதிவு செய்த டிக்கெடை ரத்து செய்தால் உங்களுக்கு கட்டணங்களை விதிக்கிறது.
இந்திய ரயில்வே அதன் எக்சிகியூட்டிவ் கிளாஸ் அல்லது ஏசி முதல் வகுப்பு, ஏசி 2-டையர், ஏசி 3-டையர் போன்ற பல்வேறு வகையான டிக்கெட்டுகளுக்கு பல்வேறு ரத்து கட்டணங்களை விதிக்கிறது. இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC), அதன் அதிகாரப்பூர்வ IRCTC இ-டிக்கெட்டிங் இணையதளத்தில் உறுதிப்படுத்தப்பட்ட ரயில் டிக்கெட்டுகளை ரத்து செய்வதற்கான விதிகளை குறிப்பிட்டுள்ளது. இரயிலின் பயணிகள் இருக்கை விவரம் தயாரிப்பதற்கு முன்பும், முன்பதிவு விவரம் தயாரிக்கப்பட்ட பின்பும் உறுதிசெய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கு IRCTC ரத்து கட்டணங்களை விதிக்கிறது.
ரயில்களின் இருக்கை விவரம் தயாரிப்பதற்கு முன் இ-டிக்கெட்டுகள் ரத்துக்கான IRCTC கட்டணங்கள்
ஐஆர்சிடிசி படி, ரத்து செய்யப்பட்ட நேரம் மற்றும் ரத்து செய்யப்பட்ட நேரத்தில் ரயில் டிக்கெட்டின் நிலை ஆகியவற்றின் அடிப்படையில் தொகை கழிக்கப்படும்.
ரயில் புறப்படுவதற்கு 48 மணிநேரத்திற்கு முன்னதாக ஆன்லைனில் உறுதிசெய்யப்பட்ட டிக்கெட் ரத்துசெய்யப்பட்டால், டிக்கெட்டுகளின் வகுப்பிற்கான ஒரு பயணிக்கான குறைந்தபட்ச ரத்து கட்டணங்கள் பின்வருமாறு:
ஏசி முதல் வகுப்பு அல்லது எக்ஸிகியூட்டிவ் வகுப்பிற்கு ரூ.240 கழிக்கப்படும்
ஏசி 2-டையர் அல்லது முதல் வகுப்புக்கு ரூ.200 கழிக்கப்படும்
ஏசி மூன்று அடுக்கு அல்லது ஏசி நாற்காலி இருக்கை அல்லது ஏசி 3 எகானமி வகுப்புக்கு ரூ.180 கழிக்கப்படும்.
ஸ்லீப்பர் வகுப்பிற்கு ரூ.120 கழிக்கப்படும்
இரண்டாம் வகுப்புக்கு ரூ.60 கழிக்கப்படும்
ரயில் புறப்படுவதற்கு 48 மணி நேரம் முதல் 12 மணி நேரத்திற்குள் உறுதிப்படுத்தப்பட்ட ரயில் டிக்கெட் ரத்து செய்யப்பட்டால், மேலே குறிப்பிட்டுள்ள குறைந்தபட்ச பிளாட் ரேட்டிற்கு உட்பட்டு கட்டணத்தில் 25 சதவீதம் ரத்து செய்யப்படும். அனைத்து ஏசி வகுப்புகளுக்கும் ஜிஎஸ்டி வரியும் பொருந்தும்.
ரயில் புறப்படுவதற்கு 12 மணி நேரம் முதல் நான்கு மணி நேரத்திற்குள் உறுதிசெய்யப்பட்ட ரயில் டிக்கெட் ஆன்லைனில் ரத்து செய்யப்பட்டால், ரத்துசெய்யும் கட்டணங்கள் குறைந்தபட்ச ரத்து விகிதத்திற்கு உட்பட்டு கட்டணத்தில் 50 சதவீதம் விதிக்கப்படும். அனைத்து ஏசி வகுப்புகளுக்கும் ஜிஎஸ்டி பொருந்தும்.
உறுதிசெய்யப்பட்ட முன்பதிவு நிலைகளைக் கொண்ட ரயில் டிக்கெட்டுகளில் டிக்கெட்டை ஆன்லைனில் ரத்து செய்யாவிட்டாலோ அல்லது ரயில் புறப்படுவதற்கு நான்கு மணிநேரத்திற்கு முன்பு TDR ஆன்லைனில் தாக்கல் செய்யாவிட்டாலோ கட்டணம் திரும்ப கிடைக்காது.
IRCTC இ-டிக்கெட்டை ஆன்லைனில் ரத்து செய்வது எப்படி?
IRCTC இ-டிக்கெட் இணையதளத்தைப் பார்வையிடவும். உள்நுழைவுத் திரையில் உங்கள் சரியான பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லைக் கொண்டு உள்நுழையவும்.
'எனது பரிவர்த்தனைகள்' என்பதற்குச் சென்று எனது கணக்கு மெனுவின் கீழ் உள்ள 'புக் செய்யப்பட்ட டிக்கெட் வரலாறு' இணைப்பைக் கிளிக் செய்யவும்.
முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகள் காண்பிக்கப்படும். ரத்து செய்ய வேண்டிய டிக்கெட்டைத் தேர்ந்தெடுத்து, 'கேன்சல் டிக்கெட்' என்பதைக் கிளிக் செய்யவும்.
டிக்கெட் ரத்து செய்யப்பட வேண்டிய பயணிகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் ரத்துசெய்தலைத் தொடங்கவும்
பயணியின் பெயருக்கு முன் உள்ள தேர்வுப்பெட்டியைத் தேர்ந்தெடுத்து, 'டிக்கெட் ரத்துசெய்' பொத்தானைக் கிளிக் செய்யவும்
உறுதிப்படுத்தல் பாப்-அப் காட்டப்படும். ரத்துசெய்ததை உறுதிப்படுத்த, 'சரி' பொத்தானைத் தேர்ந்தெடுக்கவும்.
வெற்றிகரமாக ரத்துசெய்யப்பட்டவுடன், கழிக்கப்பட வேண்டிய ரத்துத் தொகை மற்றும் திரும்பப்பெறும் தொகை திரையில் காட்டப்படும்.
ரத்து செய்யப்பட்டதற்கான உறுதிப்படுத்தல் செய்தி மொபைல் (முன்பதிவு செய்யும் போது வழங்கப்படும்) எண்ணுக்கு அனுப்பப்படும். IRCTC இல் பதிவுசெய்யப்பட்ட மின்னஞ்சல் ஐடியில் ரத்து செய்வதற்கான உறுதிப்படுத்தல் மின்னஞ்சல் கிடைக்கப் பெறும்.
ஒரு டிக்கெட்டில் பயணம் செய்பவர்களில் பகுதி அளவு மட்டும் ரத்து செய்யப்பட்டால், பயணத்தைத் தொடரும் பயணிகளுக்கான மின்னணு முன்பதிவு சீட்டின் (ERS) புதிய பிரிண்ட் அவுட்டை பயணிகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.