IRCTC Tour Packages: இந்திய ரயில்வே பயணிகளுக்கு பல சலுகைகளை வழங்கி வருகிறது.
அந்தப் பட்டியலில் தற்போதைய இணைப்பு ரூ.76,000 செலவில் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவுக்கான டூர். 5 இரவு 6 பகல் கொண்ட இந்த சுற்றுலாவில் சிங்கப்பூர், கோலாலம்பூர் என முக்கிய இடங்கள் அத்தனையும் கவர் செய்யப்படுகின்றன.
இந்த டூர் பேக்கேஜஸ் ஜூன் 25, 2019 முதல் ஹைதராபாத்தில் தொடங்குகின்றன. மலேசியன் ஏர்லைன்ஸில் எக்கானமி கிளாஸில் டிக்கெட்கள் புக் செய்யப்படுவதாக ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் தெரிவிக்கிறது.
IRCTC டூரிஸத்தின் மலேசியா சிங்கப்பூர் டூர் பற்றி நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியவை
பேக்கேஜ் பெயர் - மெஸ்மரைஸிங் சிங்கப்பூர் & மலேசியா
போகும் இடம் - சிங்கப்பூர் கோலாலம்பூர்
பயணப்படுவது - விமானம்
மொத்த இருக்கைகள் - 25
கிளாஸ் - கம்ஃபர்டபிள்
டூர் தேதி - 25.06.2019
1. பயணிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து இதன் டாரீஃப் மாறும். உதாரணமாக மூன்று பேர் சென்றால், ஒருவருக்கு 76000 செலுத்த வேண்டியிருக்கும்.
சிங்கிள் - 89,440
டபுள் - 76,000
மூன்று - 76,000
பெட் உடன் குழந்தைக்கு - 66,840
பெட் இல்லாமல் குழந்தைக்கு - 57,510
2. விமான விபரம்
MH 199 விமானம் 25.06.19 தேதி நள்ளிரவு 12.15 மணிக்கு ஹைதராபாத்திலிருந்து கிளம்பி கோலாலம்பூர் செல்கிறது. பின்னர் அங்கிருந்து MH 627 விமானம் காலை 10.10 மணிக்கு சிங்கப்பூர் செல்கிறது. மீண்டும் 30.06.19 அன்று கோலாலம்பூரிலிருந்து ஹைதராபாத் வந்தடையலாம்.
3. இந்த பேக்கேஜில் ஹைதராபாத் - கோலாலம்பூர் - சிங்கப்பூர் - ஹைதராபாத்துக்கான ஏர் டிக்கெட்ஸ், தங்குவதற்கு 3 நட்சத்திர ஹோட்டல்கள், விசா சார்ஜ், மதியம் மற்றும் இரவு உணவு என அனைத்தும் வழங்கப்படும். அதோடு 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ட்ராவல் இன்ஸுரன்ஸும் உண்டு.
4. இந்த பேக்கேஜில் ட்வின் டவர், பாடு குகை, ஜுராங் பறவைகள் பூங்கா, மெர்லியான் பார்க், செண்டோசா தீவு ஆகிய இடங்களை பார்க்க முடியும்.
5. லாண்டரி மற்றும் இதர டிப்ஸ்கள் இதில் சேர்க்கப்பட மாட்டாது என ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே அந்தமான் நிக்கோபர் தீவுகளில் 4 இரவு, 5 பகலுக்கு ரூ.28,230 செலவில் டூர் பேக்கேஜை அறிவித்துள்ளது ஐ.ஆர்.சி.டி.சி