பேங்க் லோன் இனி ஈசி; சிபில் ஸ்கோர் தேவையில்ல! மத்திய நிதி அமைச்சகத்தின் புதிய அறிவிப்பு

வங்கிகளில் இருந்து தனிநபர் கடன், நகைக்கடன், வீடு உள்ளிட்ட பிற வங்கிக்கடன் பெறுவதற்கு 'சிபில் ஸ்கோர்' எனப்படும் 3 இலக்க எண் கோரப்படுகிறது. முதல் முறை வங்கிக்கடன் பெறுவதற்கு சிபில் ஸ்கோர் கட்டாயம் இல்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

வங்கிகளில் இருந்து தனிநபர் கடன், நகைக்கடன், வீடு உள்ளிட்ட பிற வங்கிக்கடன் பெறுவதற்கு 'சிபில் ஸ்கோர்' எனப்படும் 3 இலக்க எண் கோரப்படுகிறது. முதல் முறை வங்கிக்கடன் பெறுவதற்கு சிபில் ஸ்கோர் கட்டாயம் இல்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

author-image
WebDesk
New Update
Cibil score

பேங்க் லோன் இனி ஈசி; சிபில் ஸ்கோர் தேவையில்ல! மத்திய நிதி அமைச்சகத்தின் புதிய அறிவிப்பு

இந்தியாவில் கடன் பெறுவதற்கான சிபில் ஸ்கோர் தேவைகள் குறித்த முக்கியமான அறிவிப்பை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. முதல் முறை கடன் வாங்குபவர்களுக்கு, சிபில் ஸ்கோர் இல்லை என்ற காரணத்திற்காக வங்கி கடன் விண்ணப்பங்களை நிராகரிக்க முடியாது என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறைந்தபட்ச சிபில் ஸ்கோர் கட்டாயம் இல்லை: 

Advertisment

மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, கடன் விண்ணப்பங்களை அனுமதிக்க ரிசர்வ் வங்கி (RBI) எந்தவொரு குறைந்தபட்ச கிரெடிட் ஸ்கோரையும் நிர்ணயிக்கவில்லை என்று மக்களவையில் தெளிவுபடுத்தினார். அவர் மேலும் கூறுகையில், “கடன் வழங்கும் நிறுவனங்கள், தங்கள் வணிக ரீதியான முடிவுகளுக்கு ஏற்ப, தங்கள் வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட கொள்கைகளின் அடிப்படையிலும், சில பொதுவான ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டும் முடிவெடுக்கலாம். கடன் தகவல் அறிக்கையில் விவரங்கள், கடன் வழங்குவதற்கு முன் பரிசீலிக்கப்படும் உள்ளீடுகளில் ஒன்றாக மட்டுமே இருக்கும்” என்று தெரிவித்தார்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

ரிசர்வ் வங்கியானது, முதல் முறை கடன் வாங்குபவர்களின் விண்ணப்பங்களை, முன்பு கடன் எடுக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக நிராகரிக்கக் கூடாது என்று நிதி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

சிபில் ஸ்கோர் என்றால் என்ன?

சிபில் ஸ்கோர் என்பது 300 முதல் 900 வரையிலான 3 இலக்க எண். இது ஒருவரின் கடன் பெறும் தகுதியைக் குறிக்கிறது. கடந்த காலங்களில் கடன், கிரெடிட் கார்டு பில்கள், மற்றும் இ.எம்.ஐ போன்றவற்றை சரியான நேரத்தில் திரும்பச் செலுத்திய அனுபவங்களின் அடிப்படையில் இந்த ஸ்கோர் கணக்கிடப்படுகிறது. இதன் மூலம், ஒருவருக்கு கடன் கொடுப்பது பாதுகாப்பானதா இல்லையா என்பதை வங்கிகள் முடிவு செய்கின்றன. சிபில் ஸ்கோர் இல்லாதவர்களுக்கு, வருமானச் சான்றிதழ், வேலை விவரங்கள், பிணையங்கள் (collaterals), அல்லது உத்தரவாதம் அளிப்பவர்கள் (guarantors) போன்ற ஆவணங்கள் கடன் தகுதியை மதிப்பிட உதவுகின்றன.

Advertisment
Advertisements

இந்தியாவில் தற்போது 4 நிறுவனங்களுக்கு சிபில் ஸ்கோரை தயாரிக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

டிரான்ஸ்யூனியன் CIBIL லிமிடெட் (TransUnion CIBIL Ltd), ஈக்விஃபாக்ஸ் கிரெடிட் இன்பர்மேஷன் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் (Equifax Credit Information Services Pvt Ltd), CRIF ஹை மார்க் கிரெடிட் இன்பர்மேஷன் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் (CRIF High Mark Credit Information Services Pvt Ltd), எக்ஸ்பீரியன் கிரெடிட் இன்பர்மேஷன் கம்பெனி ஆஃப் இந்தியா பிரைவேட் லிமிடெட் (Experian Credit Information Company of India Pvt Ltd). இந்த கிரெடிட் ஸ்கோர்களுக்கான கட்டணங்களை ரிசர்வ் வங்கி ஒழுங்குபடுத்துகிறது. மேலும், ஒவ்வொரு ஆண்டும் தனிநபருக்கு ஒரு இலவச கிரெடிட் ரிப்போர்ட்டை வழங்குமாறு இந்த நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

Business

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: