அமெரிக்க மத்திய வங்கி வட்டியை அதிகரித்தது. இதன் தாக்கம் மற்ற நாடுகளிலும் எதிரொலித்தது.
இந்திய வங்கிகளும் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி வீதங்களை மாற்றியமைத்துள்ளன.
இதனால் ஃபிக்ஸட் டெபாசிட்க்கு வட்டி அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மூத்த குடிமக்கள் சேமிப்புக்கான ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு நல்ல வடடிகள் கிடைக்கின்றன.
மேலும் ஃபிக்ஸட் டெபாசிட்கள் பரஸ்பர நிதி திட்டங்கள் மற்றும் இதர பங்குச் சந்தை திட்டங்களை விட ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் குறைந்த அபாயம் மற்றும் பாதுகாப்பான முதலீடாக திகழ்கின்றன.
இதற்கிடையில் ஃபிக்ஸட் டெபாசிட் நமது சேமிப்பு பழக்கத்தையும் ஊக்குவிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். அந்த வகையில் பாதுகாப்பான ரிட்டன் மற்றும் வட்டியை மட்டும் எதிர்பார்க்கும் நபர்கள் ஃபிக்ஸட் டெபாசிட்களில் முதலீடு செய்யலாம்.
அதேநேரம் கூடுதல் ரிட்டன் எதிர்பார்க்கும் முதலீட்டாளர்களுக்கு ஃபிக்ஸ்ட் சரியான முதலீடு கருவி கிடையாது. அவர்கள் பங்குச் சந்தை உள்ளிட்ட முதலீடுகளை நாடலாம்.
பங்குச் சந்தை முதலீடு என்பது அபாயத்துக்கு உள்பட்டது என்பதால் சரியான பொருளாதார நிபுணருடன் தங்களது நிதித் திட்டத்தை பகிர்ந்துகொண்டு முதலீடு செய்வது நல்லது.
மேலும் இது ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுக்கும் பொருந்தும். பொதுத்துறை வங்கி நிறுவனத்தை காட்டிலும் தனியார் வங்கிகளும், தனியார் வங்கிகளை காட்டிலும் சிறிய ரக வங்கிகள் ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு அதிக வட்டி தருகின்றன.
ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு காப்பீடு உத்தரவாதமும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil