Dhanteras and Diwali festivals | இந்துக்களின் புனித பண்டிகையான தந்தேராயாஸ் மற்றும் தீபாவளிக்கு தங்கத்தில் முதலீடு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐசிஐசிஐ ப்ருடென்ஷியல் ஏஎம்சியின் முதலீட்டு வியூகத்தின் தலைவரான சிந்தன் ஹரியா, மஞ்சள் உலோகத்தைப் பயன்படுத்துவதற்கு முன் முதலீட்டாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.
இஸ்ரேல்-ஹமாஸ் மோதலுக்கு மத்தியில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் காணப்படுமா?
பதில் : புவிசார் அரசியல் ஸ்திரமின்மை ஏற்படும் காலகட்டங்களில் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து காணப்படும். இதற்கு முதலீட்டாளர்கள் தங்கத்தை பாதுகாப்பானதாக கருதுவதே காரணம் ஆகும். மேலும் இதனை எளிதில் பணமாக மாற்றிக் கொள்ளலாம்.
10 கிராம் தங்கம் ரூ.70 ஆயிரத்தை தொடுமா?
பதில் : கடந்த 12 வருடங்களாக டாலரில் தங்கத்தின் விலை சீராக உள்ளது. இந்த காலக்கட்டத்தில், பங்கு மற்றும் பத்திர சந்தைகள் நிறுவன மற்றும் ஓய்வூதிய நிதி வெளிப்பாடுகளில் விரைவான உயர்வைக் கண்டன. இப்போது, அதிகரித்து வரும் வட்டி விகிதங்கள் மற்றும் புவிசார் அரசியல் பதற்றம் காரணமாக, மத்திய வங்கிகள் தங்கத்தை நோக்கி மாறியுள்ளன. கடந்த சில மாதங்களாக சீனா தொடர்ந்து தங்கத்தை சேர்த்து வருவதாக உலக தங்க கவுன்சில் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் தங்கத்தின் விலையில் தொடர் உயர்வுகள் இருக்கும்.
ஒருவர் தங்கப் பத்திரங்கள் அல்லது தங்க நிதிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டுமா?
பதில் : ஒருவரின் போர்ட்ஃபோலியோ தேவையின் அடிப்படையில், ஒரு முதலீட்டாளர் தங்கத்தில் முதலீடு செய்யலாம்.
ஒவ்வொன்றும் அதன் தனித்துவமான நன்மைகளைக் கொண்டுள்ளது. சிறு சிறு நிதியாக முதலீடு செய்ய விரும்பினால் தங்க நிதிகள் சிறந்தது.
முதலீட்டாளரின் போர்ட்ஃபோலியோவில் தங்கத்தின் சிறந்த விகிதம் என்னவாக இருக்க முடியும்?
பதில் : ஒரு போர்ட்ஃபோலியோவில் தங்கத்திற்கான சிறந்த ஒதுக்கீடு குறித்து முடிவு செய்ய நிதி ஆலோசகரை அணுகுவது சிறந்தது. தற்போதுள்ள சூழலில் 10 சதவீதம் வரை முதலீடு செய்யலாம்.
தங்க நிதிகளின் அபாயங்கள் என்ன?
பதில் : தங்க நிதிகளில் பங்குச் சந்தை அபாயங்கள் உள்ளன. இது குறித்து தெரிந்துக்கொண்டு முதலீடு செய்வது நல்லது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“