இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) புழக்கத்தில் இருந்து ரூ.2000 நோட்டுகளை திரும்பப் பெற்றது. 2000 ரூபாய் நோட்டுகளை வைத்திருக்கும் நபர்கள் இப்போது வங்கியில் இருந்து மற்ற மதிப்புள்ள நோட்டுகளுக்கு மாற்றலாம் அல்லது அதைத் தங்கள் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யலாம்.
நீங்கள் ஒரு பரிவர்த்தனையில் 50,000 ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்தால், வருமான வரி விதிகளின்படி உங்கள் பான் எண்ணை கட்டாயமாக குறிப்பிட வேண்டும்.
வருமான வரி விதிகளின் விதி 114B, வங்கி அல்லது தபால் அலுவலகத்தில் ஒரே நாளில் 50,000 ரூபாய்க்கு மேல் ரொக்கமாக டெபாசிட் செய்தால், தனிநபர் தனது பான் எண்ணைக் குறிப்பிடுவது கட்டாயமாக்குகிறது. இருப்பினும், ஒரே நாளில் டெபாசிட் செய்யப்பட்ட தொகை ரூ. 50,000க்கு மிகாமல் இருந்தால், பான் எண்ணைக் குறிப்பிடுவது கட்டாயமில்லை.
ஆக, ஒருவர் ஒரே நாளில் ரூ.20,000 பணத்தை டெபாசிட் செய்துவிட்டு, சில நாள்களுக்குப் பிறகு ரூ.40,000-ஐ ரொக்கமாக டெபாசிட் செய்தால், வங்கியோ அல்லது தபால் நிலையமோ அவருடைய பான் அல்லது ஆதாரை கேட்கக் கூடாது.
டெபாசிட் செய்வதோடு, ஒரு நபருக்கு ரூ.2,000 நோட்டுகளை மாற்றிக்கொள்ளும் வாய்ப்பும் உள்ளது. இருப்பினும், ரிசர்வ் வங்கி மாற்றக்கூடிய நோட்டுகளின் எண்ணிக்கைக்கு வரம்பு விதித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் அறிவிப்பின்படி, ஒரு நபர் ஒரு நேரத்தில் அதிகபட்சமாக 10 நோட்டுகள் அல்லது ரூ.20,000 வரை மாற்றிக்கொள்ளலாம்.
இருப்பினும், வங்கிக் கணக்கில் செலுத்தக்கூடிய வைப்புத் தொகைக்கு வரம்பு இல்லை. டெபாசிட்களுக்கு KYC விதிகள் பொருந்தும். 2000 ரூபாய் நோட்டை டெபாசிட் செய்ய அல்லது மாற்றுவதற்கான கடைசி தேதி செப்டம்பர் 30, 2023 ஆகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“