வருமான வரியை தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள் மக்களே… வருடக் கடைசி என்பதால் இன்று இரவு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு நீங்கள் தயாராக இருப்பீர்கள் என்று தெரியும் ஆனால் வருமான வரி தாக்கல் செய்வதும் மிகவும் முக்கியமானது.
வருமான வரித்துறை டிசம்பர் 30 அன்று வெளியிட்டுள்ள ட்வீட்டில் 5.34 கோடி பேர் இதுவரை ஐ.டி.ஆர். தாக்கல் செய்துள்ளனர் என்றும் நேற்று ஒரே நாளில் 24.39 லட்சம் பேர் ஐ.டி.ஆர். தாக்கல் செய்துள்ளனர் என்றும் கூறியுள்ளது. நீங்களும் அதில் ஒருவராக இருந்தால் தப்பித்துக் கொண்டீர்கள். இல்லையென்றால் கொஞ்சம் சிக்கல் தான்.
ஐ.டி.ஆர். தாக்கல் செய்வதற்கு இரண்டு முறை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூலை 31ல் இருந்து செப்டம்பர் 30ம் தேதிக்கும், பிறகு செப்டம்பர் 30ல் இருந்து டிசம்பர் 31-க்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. 2020-2021 நிதியாண்டிற்கான தாமதமான ஐடிஆரை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி 2021-2022 மார்ச் 31, 2022 ஆகும்.
எந்த அபராதமும் செலுத்தாமல் அல்லது எந்தவிதமான சலுகைகளும் இல்லாமல் உங்கள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யக்கூடிய இறுதி நாளை குறிக்கிறது டிசம்பர் 31ம் தேதி. மார்ச் 31 என்பது உங்கள் அபராதம் மற்றும் கட்டணத்தை கட்டிய பிறகு வருமான வரித்துறையிடம் ஐ.டி.ஆர்-ஐ தாக்கல் செய்ய வேண்டிய கடைசி நாளாகும்.
சில மணி நேரங்களில் கிடைக்கும் பர்சனல் லோன்… வீடு ரெனவேஷன், கல்யாண செலவு கவலைய விடுங்க
உங்களின் வருமானம் ரூ. 5 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தால் நீங்கள் ரூ. 5000 வரை அபராதம் செலுத்த வேண்டும். ரூ. 5 லட்சத்திற்கு குறைவாக உங்களின் வருமானம் இருந்தால் டிசம்பர் 31ம் தேதிக்கு முன்பு ஐ.டி.ஆர். தாக்கல் செய்யாத காரணத்திற்கு ரூ. 1000 அபராதம் செலுத்த வேண்உம். ஆனால் உங்களின் வருமானம் வரிக்குட்பட்ட பிரிவில் வரவில்லை என்றால், உங்களிடம் கட்டணம் வசூலிக்கப்படமாட்டார்கள்.
கணக்குகளை தணிக்கை செய்யத் தேவையில்லாத தனிப்பட்ட வரி செலுத்துவோருக்கு மட்டுமே டிசம்பர் 31 நள்ளிரவு கடைசி தேதியாகும். கணக்குகளை தணிக்கை செய்ய வேண்டிய நிறுவனங்களுக்கு, ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான இறுதி நாள் பிப்ரவரி 15, 2022க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 31ம் தேதிக்குள் இதனை திருப்பி செலுத்தியிருக்க வேண்டும். ஆனால் நவம்பர் 30ம் தேதிக்கு இது ஒத்திவைக்கப்பட்டது. பிறகு மீண்டும் கடைசி தேதி பிப்ரவரிக்கு மாற்றி அறிவிக்கப்பட்டது. வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 139 (4) இன் கீழ், ‘தாமதமான வருமானம்’ என்பதன் கீழ் உங்கள் வருமானத்தை நீங்கள் இன்னும் தாக்கல் செய்யலாம்.
செலுத்தப்படாத வரி பொறுப்புகள் ஏதேனும் இருந்தால் அதற்கான வட்டியை நீங்கள் அபராதமாக கட்ட வேண்டும். இந்த மதிப்பு தாமதத்தின் விகிதாச்சாரத்தை அதிகரிக்கும்.
டிசம்பர் 31க்கு பிறகு நீங்கள் அட்டும் கூடுதல் வரி மீதான வட்டியை உங்களால் திரும்பப் பெற இயலாது.
உங்களின் நடப்பு ஆண்டு வருமானத்திற்கு எதிரான இழப்பை நீங்கள் அடுத்த வருமான வரி செலுத்தும் காலத்தின் போது நிர்ணயிக்க இயலாது.
குறிப்பிடத்தக்க வகையில், கடந்தகால வரிகள் அனைத்தையும் சரியான நேரத்தில் செலுத்திய போதிலும் உங்களால் எந்த இழப்பையும் முன்னோக்கிச் செல்ல முடியாது. வணிகம் மற்றும் தொழில், குறுகிய கால அல்லது நீண்ட கால மூலதன இழப்புகள் அல்லது வேறு ஏதேனும் இழப்புகள் இருந்தாலும் இதில் அவை அடங்கும்.
இழப்பை முன்னோக்கி கொண்டு செல்ல, நீங்கள் அனைத்து வரிகளையும் நிலுவைத் தேதிக்கு முன் தாக்கல் செய்வது கட்டாயமாகும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil