Advertisment

வருமான வரி தாக்கலுக்கு கடைசி தேதி டிசம்பர் 31; இந்த ஆவணங்கள் முக்கியம்

2020-21 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு (ITR) தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி, தேவையான ஆவணங்கள்; இதுவரை ITR தாக்கல் செய்யாவிட்டால், தேவையான ஆவணங்களைத் தெரிந்துகொள்ள இந்தக் கட்டுரையைப் படியுங்கள்

author-image
WebDesk
New Update
வருமான வரி தாக்கல் செய்ய வில்லையா? இவ்வளவு பெரிய தொகை அபராதம்!

ITR Filing FY 2020-21: Last date, list of documents required to file an Income Tax Return: 2020-21 நிதியாண்டிற்கான (FY21) வருமான வரிக் கணக்கை (ஐடிஆர்) தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் டிசம்பர் 31 ஆகும். பொதுவாக, ஐடிஆர்களை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 31 ஆகும், இந்த ஆண்டு புதிய ITR போர்ட்டலில் பல தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக கடைசி தேதி இரண்டு முறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Advertisment

வருமான வரித் துறையானது வரி செலுத்துவோருக்கு SMS, மின்னஞ்சல்கள், சமூக ஊடகங்கள் மற்றும் பல தளங்கள் மூலம் நினைவூட்டல்களை வழங்கி வருகிறது, மேலும் அவர்களின் ஐடிஆர்களை விரைவில் தாக்கல் செய்யுமாறும் கடைசி தேதிக்காக காத்திருக்க வேண்டாம் என்றும் வலியுறுத்துகிறது.

“எந்தவொரு கடன் செயலாக்கத்திற்கும் ITR ஒரு முக்கியமான ஆவணம் என்பதை நீங்கள் அறிவீர்கள் என்று நம்புகிறோம். எனவே, ஏன் தாமதம்? இன்றே உங்கள் ஐடிஆர்-ஐ தாக்கல் செய்யுங்கள்! AY 2021-22க்கான வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கான இறுதித் தேதி டிசம்பர் 31, 2021,” என இந்திய வருமான வரித்துறை ட்வீட் செய்துள்ளது.

நீங்கள் இன்னும் உங்கள் ஐடிஆர்-ஐ தாக்கல் செய்யவில்லை என்றால், அதைச் செய்ய உங்களுக்கு சில நாட்கள் மட்டுமே மிச்சம் உள்ளன. எனவே, கடைசி நிமிட அவசரம், குளறுபடிகள் அல்லது பிழைகளைத் தவிர்க்க உங்கள் ஐடிஆரை விரைவில் தாக்கல் செய்வது நல்லது.

உங்களின் சரியான வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய நீங்கள் வைத்திருக்க வேண்டிய முக்கிய ஆவணங்களின் பட்டியல் இங்கே:

படிவம் 16

படிவம் 16 அனைத்து சம்பளதாரர்களுக்கும் ITR ஐ தாக்கல் செய்வதற்கான முக்கிய ஆவணமாகும். இது ஒரு நிறுவனத்தால் அதன் ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது மற்றும் இது ஒரு கட்டாய ஆவணமாகும். ஒவ்வொரு நிறுவனமும் வருமான வரி பிடித்தம் செய்த அனைத்து சம்பளம் பெறும் ஊழியர்களுக்கும் படிவம் 16 ஐ வழங்க கடமைப்பட்டுள்ளனர். படிவம் 16 என்பது மூலத்திலிருந்து கழிக்கப்பட்ட வரி (TDS) சான்றிதழ் ஆகும். இது பணியாளருக்கு வழங்கப்படும் சம்பளம் மற்றும் அதற்கான TDS விவரங்களைக் கொண்டுள்ளது.

இப்போது, ​​இந்த ஆவணம் இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது - பகுதி A மற்றும் B. பகுதி A என்பது நிதியாண்டில் நிறுவனத்தால் கழிக்கப்பட்ட வருமான வரியைக் கொண்ட பகுதியாகும். இது பணியாளரின் நிரந்தர கணக்கு எண் (PAN) விவரங்கள் மற்றும் நிறுவனத்தின் வரி விலக்கு கணக்கு எண் (TAN) ஆகியவற்றை தனித்தனியாகக் கொண்டுள்ளது. படிவம் 16 இன் பகுதி B பணியாளரின் மொத்த சம்பளத்தின் பிரிவு வாரியான தகவல்களை உள்ளடக்கியது.

வட்டி வருமான சான்றிதழ்கள்

சம்பள வருவாயைத் தவிர, வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் இருந்து சேமிப்பு கணக்கு வைப்பு மற்றும் நிலையான வைப்பு (FD) போன்ற பல்வேறு வட்டி தரும் முதலீடுகளிலிருந்து தனிநபர் வருமானம் ஈட்டுகிறார். இந்த நிதி நிறுவனங்கள் தங்கள் வைப்புத்தொகையாளர்களுக்கு வட்டி சான்றிதழ்கள் அல்லது வங்கி அறிக்கைகளை வழங்குகின்றன. ஒரு தனிநபர், வங்கி அல்லது அஞ்சலகத்தில் வைத்திருக்கும் சேமிப்புக் கணக்கிலிருந்து சம்பாதித்த வட்டியில் வருமான வரிச் சட்டத்தின் 80TTA பிரிவின் கீழ் விலக்கு கோரலாம்.

வரி சேமிப்புக்கான முதலீட்டுச் சான்றுகள்

முந்தைய நிதியாண்டில் கொடுக்கப்பட்ட காலக்கட்டத்தில் தங்கள் உண்மையான வரி சேமிப்பு முதலீட்டுச் சான்றுகளை HR அல்லது அக்கவுண்ட்ஸ் துறையில் சமர்ப்பிக்க முடியாத தனிநபர்கள், வரி விலக்குகளைப் பெறுவதற்கு வருமான வரித் துறைக்கு நேரடியாக அறிவித்து சமர்ப்பிக்க வேண்டும்.

இவற்றில் ஆயுள் காப்பீடு (எல்ஐசி) செலுத்திய பிரீமியம் ரசீது, மருத்துவக் காப்பீட்டு ரசீது, பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்) ரசீது, 5 ஆண்டு பிக்ஸிட் டெபாசிட் ரசீதுகள், பரஸ்பர நிதி முதலீடு (இஎல்எஸ்எஸ்), யூலிப்கள், என்எஸ்சி, வீட்டுக் கடன் திருப்பிச் செலுத்தும் சான்றிதழ் அல்லது அறிக்கை, நன்கொடை செலுத்திய ரசீது, கல்விக் கட்டணம் செலுத்திய ரசீது போன்றவை அடங்கும்.

பிரிவு 80C இன் கீழ் கோரக்கூடிய அதிகபட்ச விலக்குத் தொகை ரூ. 1.5 லட்சம் ஆகும், அதே சமயம் தனிநபர், அவருக்கோ, அவரது மனைவி மற்றும் சார்ந்துள்ள குழந்தைகளுக்கான காப்பீட்டில் பிரிவு 80D இன் கீழ் ரூ.25,000 விலக்கு கோர முடியும். 60 வயதுக்கு குறைவான பெற்றோரின் காப்பீட்டுக்கான கூடுதல் விலக்கு ரூ.25,000 வரை கிடைக்கும். பெற்றோர் 60 வயதுக்கு மேல் இருந்தால், விலக்கு தொகை ரூ 50,000.

படிவம் 26AS

படிவம் 26AS என்பது வருமான வரித் துறையால் உருவாக்கப்பட்ட வருடாந்திர ஒருங்கிணைந்த வரி அறிக்கையாகும். அனைத்து வரி செலுத்துபவர்களும் தங்கள் பான் எண்ணைப் பயன்படுத்தி வருமான வரி இணையதளத்தில் இருந்து இதை எளிதாக அணுகலாம். சம்பளம் பெறும் வகுப்பினரின் TDS மற்றும் நிதியாண்டில் செலுத்தப்பட்ட வரிகள் (சுய தொழில் செய்பவர்கள் அல்லது வணிகர்கள்) இதில் உள்ளது.

ஐடிஆரைத் தாக்கல் செய்யும் போது, ​​வரி செலுத்துவோர் தங்களது படிவம் 26ASஐப் பார்த்து, மத்திய அரசின் கருவூலத்திற்குச் செலுத்திய வரித் தொகையை அவர்களின் படிவம் 16 உடன் கணக்கிடலாம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Business Itr Filling
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment