வருமான வரியை தாக்கல் செய்வதற்கு முன்பு இதையெல்லாம் கொஞ்சம் செக் பண்ணிக்கோங்க!

இந்த ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்யும் படிவங்களில் பல்வேறு மாற்றங்கள் உருவாகியுள்ளது.

ITR Filing: ITR forms Changes from AY 2020-21 : இந்த நிதி ஆண்டுக்கான வருமான வரியை தாக்கல் செய்வதற்கு முன்பு செய்ய வேண்டிய சில கட்டாயமான விசயங்கள் என்னென்ன என்பதை விளக்குகிறது இந்த கட்டுரை. உங்களின் வருமான வரியை தாக்கல் செய்யும் போது நீங்கள் உங்களின் வருமானம் மற்றும் முதலீடு குறித்து மட்டுமல்லாமல் தற்போது பாஸ்போர்ட், வெளிநாட்டு பயணம், மின்சார கட்டணம் ஆகியவற்றை குறித்தும் அப்டேட் செய்ய வேண்டும்.

வருமான வரித்துறை தற்போது பல்வேறு முக்கிய அம்சங்களை இணைத்து புதிய படிவங்களை உருவாக்கியுள்ளது. ஒவ்வொரு வடத்திலும் வருமான வரியை தாக்கல் செய்ய 7 படிவங்கள் வெளியிடப்படும். தற்போது ஐ.டி.ஆர். சஹஜ் என்ற படிவம் ஒன்றையும், சுகம் என்ற ஐ.டி.ஆர் 4ம் படிவத்தையும் வெளியிட்டுள்ளது.

ITR Filing: ITR forms Changes from AY 2020-21

வங்கிகளில் ரூ. 1 கோடி வரையில் முதலீடு செய்தவர்களுக்கு, 2 லட்ச ரூபாய் வரை வெளிநாட்டு பயணத்திற்கு செலவு செய்தவர்களுக்கு, 1 லட்சம் ரூபாய் வரை எலெக்ட்ரிக் பில் செலுத்தியவர்களுக்கு ஃபார்ம் ஒன்று இனி கிடையாது.

ஃபார்ம் ஒன்றினை 50 லட்சத்திற்கும் குறைவான வருட வருமானம் கொண்டவர்கள், மாத சம்பளக்காரர்கள், ஒரே ஒரு வீடு வைத்திருப்பவர்கள், வட்டி மூலம் வருமானம் ஈட்டுபவர்கள், குடும்பமாக ஓய்வூதியம் பெறுபவர்கள் ஆகியோர் இந்த படிவங்களை பூர்த்தி செய்து கொள்ளலாம். ஐ.டி.ஆர் படிவம் நான்கினை பிசினஸ் மற்றும் ஃப்ரொஃபெஷன் மூலம் ரூ. 50 லட்சத்திற்கும் குறைவான வருமானம் பெறுபவர்கள் பூர்த்தி செய்யலாம்.

மற்ற குடும்ப உறுப்பினர்களோடு சேர்ந்து ஒரு வீட்டினை சொந்தமாக வைத்திருக்கும் பட்சத்தில் நீங்கள் இந்த இரண்டு படிவங்களையும் பூர்த்தி செய்ய வேண்டாம்.

இரண்டு படிவங்களிலும் நீங்கள் உங்களின் பாஸ்போர்ட் அட்டை எண்ணை பயன்படுத்த வேண்டும்.

ஐ.டி.ஆர் படிவம் 4-ல், 2 லட்சத்திற்கும் மேலாக வெளிநாட்டு பயணங்களில் பணம் செலுவு செய்தீர்களா? எவ்வளவு பணம் செலவு செய்தீர்கள் மற்றும் எலெக்ரிக் கட்டணம் 1 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கிறதா போன்ற விபரங்களை நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டும்.

மேலும் படிக்க : FASTag : 15ம் தேதி அன்று கட்டாயமாகிறது ஃபாஸ்டேக்! டோல்கேட் கட்டணங்கள் எவ்வளவு?

Get all the Latest Tamil News and Business News in Tamil at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close