முக்கனிகளில் முதல் கனி மா என்றால் இரண்டாம் கனி பலா. இதனை கேரள மக்கள் சக்கை என்பார்கள். கேரளம் மற்றும் தமிழகத்தை ஒட்டியுள்ள மாவட்டங்களில் பலா சககை என சேர்த்து சொல்வார்கள்.
இந்தப் பலாப்பழங்கள் சாப்பிட நல்ல டேஸ்டியாக காணப்படும். இந்தப் பலாப்பழங்கள் சேலம் ஏற்காட்டில் மஞ்சள், சிவப்பு, ரோஸ், வெள்ளை என 4 நிறங்களில் கிடைக்கின்றன.
![jackfruit](https://img-cdn.thepublive.com/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/B7l8WbdpYXFFp7NC8TIt.jpg)
இந்தப் பழங்கள் குறித்து பேசிய தோட்டத்தின் உரிமையாளர், “பலா மரத்துக்கு செயற்கையான எவ்வித உரங்களும் போடுவதில்லை. இயற்கையான முறையில் பலா உற்பத்தி செய்யப்படுகிறது.
பலா பழத்தை பழுக்க வைக்கவும் செயற்கை முறையை நாங்கள் பயன்படுத்த மாட்டோம். இந்தப் பலா வகைகள் சுளைகளில் மடடும்தான் மஞ்சள், ரோஸ், வெள்ளை மற்றும் சிவப்பு வண்ணங்களில் காணப்படும். இதனை மக்கள் வெகுவாக வாங்கிச் செல்வார்கள்” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“