fixed-deposits | ஜம்மு மற்றும் காஷ்மீர் (ஜே&கே) வங்கி நவம்பர் 11, 2023 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை உயர்த்தி உள்ளது.
வங்கியின் சமீபத்திய உயர்வுக்குப் பிறகு, ஏழு நாள்கள் முதல் 45 நாள்கள் வரையிலான டெபாசிட்டுகளுக்கு 3.5%, 46 நாள்கள் முதல் 90 நாள்கள் வரை 4.6% மற்றும் 91 நாள்கள் முதல் 180 நாள்கள் வரை முதிர்ச்சியடையும் FDகளுக்கு 4.75% வட்டி விகிதத்தை வழங்குகிறது.
தொடர்ந்து, 181 நாள்கள் முதல் 221 நாள்கள் வரை, 222 நாள்கள் மற்றும் 223 நாள்கள் முதல் 270 நாள்களுக்கு குறைவான கால டெபாசிட்டுகளுக்கு, வங்கி முறையே 5.6%, 6.3% மற்றும் 5.6% வட்டி விகிதங்களை வழங்குகிறது.
மேலும், ஒரு வருடத்தில் இருந்து இரண்டு வருடங்களுக்குள் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு, ஜம்மு மற்றும் காஷ்மீர் 7.1% வட்டி விகிதத்தை வழங்குகிறது.
மேலும், வங்கி 555 நாள்களுக்கு வட்டி விகிதத்தை 40 அடிப்படை புள்ளிகள் (பிபிஎஸ்) உயர்த்தியுள்ளது. இப்போது, வங்கி 7.50% வட்டி விகிதத்தை வழங்குகிறது.
இரண்டு வருடங்கள் முதல் மூன்று வருடங்களுக்குள் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு, வங்கி 7% வருமானத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது.
மூன்று வருடங்கள் முதல் 10 வருடங்களில் முதிர்ச்சியடையும் FDகளுக்கு 6.5% வட்டி வழங்கப்படும்.
வ.எண் |
ஃபிக்ஸட் டெபாசிட் நாள்கள் |
வட்டி (%) |
01 |
7 முதல் 30 நாள்கள் |
3.50% |
02 |
31 முதல் 45 நாள்கள் |
3.50% |
03 |
46 முதல் 90 நாள்கள் |
4.6% |
04 |
91 முதல் 180 நாள்கள் |
4.75% |
05 |
181 முதல் 221 நாள்கள் |
5.6% |
06 |
222 நாள்கள் |
6.3% |
07 |
223 நாள்கள் முதல் 270 நாள்களுக்குள் |
5.6% |
08 |
271 நாள்கள் முதல் 332 நாள்களுக்குள் |
6% |
09 |
333 நாள்கள் |
6.6% |
10 |
334 நாள்கள் |
6% |
11 |
ஓராண்டு |
7.1% |
12 |
555 நாள்கள் |
7.50% |
13 |
556 நாள்கள் 2 ஆண்டுக்குள் |
7.10% |
14 |
2 ஆண்டு முதல் 3 ஆண்டுக்குள் |
7% |
15 |
3 ஆண்டு முதல் 5 ஆண்டுக்குள் |
6.5% |
16 |
5 ஆண்டு முதல் 10 ஆண்டுவரை |
6.5% |
ஜம்மு & காஷ்மீர் வங்கியில் பிக்ஸட் டெபாசிட் கணக்கைத் திறக்கும் மூத்த குடிமக்களுக்கு 0.50% கூடுதல் வட்டி விகிதம் கிடைக்கும். மேலும், ஜம்மு & காஷ்மீர் வங்கியில் ஃபிக்ஸட் டெபாசிட் கணக்கைத் தொடங்க குறைந்தபட்ச வைப்புத் தொகை ரூ.100 ஆகும்.
ஐ.டி.பி.ஐ வங்கி
ஐடிபிஐ வங்கியும் அதன் டெர்ம் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்களைத் திருத்தியுள்ளது.
இந்த விகிதங்கள் நவம்பர் 12, 2023 முதல் அமலுக்கு வந்துள்ளன. ஐடிபிஐ வங்கியானது ஏழு நாள்கள் முதல் பத்து வருடங்களில் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கு 3% முதல் 7% வரையிலான வட்டி விகிதத்தை பொது வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“