ஓராண்டு எஃப்.டி-க்கு 9% வட்டி; சீனியர் சிட்டிசன்கள் நோட் பண்ணுங்க!

2023ஆம் ஆண்டு நவம்பரில் ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (SFB) அதன் ஆரம்ப பொதுப் பங்களிப்பை (IPO) தொடங்க சந்தை கட்டுப்பாட்டாளரான செபி (SEBI) அனுமதி வழங்கியது.

2023ஆம் ஆண்டு நவம்பரில் ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (SFB) அதன் ஆரம்ப பொதுப் பங்களிப்பை (IPO) தொடங்க சந்தை கட்டுப்பாட்டாளரான செபி (SEBI) அனுமதி வழங்கியது.

author-image
WebDesk
New Update
The Latest Fixed Deposit Interest Rates

ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியின் வாடிக்கையாளர்கள் நிலையான வைப்பு கணக்குகளை திறக்க தகுதியுடையவர்கள் ஆவார்கள்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Fixed Deposits | Small Finance Bank | இந்தியாவில் உள்ள அனைத்து சிறு நிதி வங்கிகளில் ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி லிமிடெட் மிக முக்கியமான ஒன்றாகும். இந்த வங்கி ஜனவரி 02, 2024 அன்று, ரூ. 2 கோடிக்கு கீழ் உள்ள நிலையான வைப்புகளுக்கு வழங்கும் வட்டி விகிதங்களை திருத்தியது.
இந்தத் திருத்தத்திற்குப் பிறகு, வங்கி இப்போது முதியோர்களுக்கு 9.00% வட்டியை வழங்குகிறது. வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு 8.50% வட்டியை வழங்குகிறது.

Advertisment

ஜனா ஸ்மால் வங்கி வட்டி விகிதம்

ஜனா ஸ்மால் வங்கி 7-14 நாட்களில் முதிர்ச்சியடையும் உள்நாட்டு சில்லறை கால வைப்புகளுக்கு 3.00% வட்டி விகிதத்தை வழங்குகிறது.
அதே நேரத்தில் 15-60 நாட்களில் முதிர்ச்சியடையும் எஃப்.டி.க்களுக்கு 4.25% வட்டி விகிதத்தை வழங்குகிறது. 61-90 நாட்கள் டெபாசிட் கால எஃப்.டி-க்களுக்கு 5.00% வட்டி விகிதம் கிடைக்கும்.

தொடர்ந்து, 91-180 நாட்கள் எஃப்.டிக்கு 6.50% ஆகும். மேலும், 181-364 நாட்களில் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் 8.00% ஆகவும், 365 நாட்களில் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் தற்போது 8.50% ஆகவும் உள்ளது.

Advertisment
Advertisements

1 ஆண்டு முதல் 2 ஆண்டுகள் வரை (730 நாட்கள்) முதிர்ச்சியடையும் உள்நாட்டு சில்லறை டெர்ம் டெபாசிட்டுகளுக்கு 8.25% வட்டி விகிதத்தையும், 2 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை (1825 நாட்கள்) முதிர்ச்சியடையும் எஃப்.டிக்களுக்கு 7.25% வட்டி விகிதத்தையும் ஜனா ஸ்மால் வங்கி வழங்குகிறது.
ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் 6.50% ஆக இருக்கும். மேலும், குடியுரிமை பெற்ற மூத்த குடிமக்கள், ஜனா SFB இல் அனைத்துக் காலங்களிலும் நிலையான விகிதங்களை விட 50 bps கூடுதல் வட்டி விகிதத்தைப் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Fixed Deposits Small Finance Bank

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: