Advertisment

Fixed Deposit: சீனியர் சிட்டிசன்களுக்கு 9 சதவீதம் வட்டி: இதைப் பாருங்க!

திய விகிதங்கள் மே 30, 2023 முதல் பொருந்தும் என்று ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

author-image
WebDesk
Jun 02, 2023 13:11 IST
Know the LIC Kanyadan Policy

இது குடும்பத்திற்கும் குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு கடினமான காலங்களில் உதவுகிறது.

ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி ரூ.2 கோடிக்கும் குறைவான நிலையான வைப்புத்தொகைக்கான வட்டி விகிதங்களைத் திருத்தியுள்ளது.

இந்தப் புதிய விகிதங்கள் மே 30, 2023 முதல் பொருந்தும் என்று ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisment

ஜனா ஸ்மால் வங்கி

7-14 நாள்களில் முதிர்ச்சியடையும் நிலையான வைப்புகளுக்கு, வங்கி 3.75% வட்டி விகிதத்தை வழங்குகிறது. மேலும் ஜனா SFB 15-60 நாள்களில் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு 4.25% வட்டி விகிதத்தை வழங்குகிறது.

தொடர்ந்து, ஜனா SFB 61 முதல் 90 நாள்கள் வரையிலான டெபாசிட்டுகளுக்கு 5.00% வட்டி விகிதத்தையும், 91 முதல் 180 நாள்கள் வரையிலான டெபாசிட்டுகளுக்கு 6.25% வட்டி விகிதத்தையும் வழங்குகிறது.

181-364 நாட்களுக்குள் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு 7.00% வட்டி விகிதம் கிடைக்கும், அதே சமயம் 1 வருடத்தில் (365 நாட்கள்) முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு 7.25% வட்டி விகிதம் விதிக்கப்படும்.

366 நாட்கள் முதல் 2 ஆண்டுகள் வரை முதிர்ச்சியடையும் நிலையான வைப்புகளுக்கு, வங்கி 8.50% வட்டி விகிதத்தை வழங்குகிறது. அதே நேரத்தில் ஜனா SFB 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு 7.35% வட்டி விகிதத்தை வழங்குகிறது.

அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கு, ஜனா SFB இப்போது 7.25% வட்டி விகிதத்தை வழங்குகிறது.

மூத்த குடிமக்கள் ஃபிக்ஸட் டெபாசிட் விகிதங்கள்

ஜனா SFB மூத்த குடிமக்களுக்கு 4.25% முதல் 9% வரை வட்டி விகிதத்தை வழங்குகிறது. தொடர்ந்து, 366 - 499 நாள்கள், 501 நாள்கள் - 2 ஆண்டுகள் மற்றும் 500 நாள்கள் வரையிலான காலப்பகுதியில் அதிகபட்ச வட்டி விகிதம் 9% வழங்கப்படுகிறது.

60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் மட்டுமே மேலே குறிப்பிட்டுள்ள மூத்த குடிமக்கள் வட்டி விகிதத்திற்கு தகுதியுடையவர்கள் ஆவார்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Fixed Deposits
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment