SBI கிரெடிட் கார்டு பயன்படுத்துகிறீர்களா? உங்களுக்குத்தான் இந்த அதிர்ச்சி செய்தி..
SBI Credit Card Cheque Payment Fees Hike : SBI கிரெடிட் கார்டு பயன்படுத்தி பொருட்களை வாங்கி, வங்கிக்கு காசோலை (cheque) மூலம் பணம் செலுத்துபவர்களா நீங்கள்...2020 ஜனவரி முதல் கூடுதலாக ரூ.118 எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்...
SBI Card Late Payment Charges: SBI கிரெடிட் கார்டு பயன்படுத்தி பொருட்களை வாங்கி, வங்கிக்கு காசோலை (cheque) மூலம் பணம் செலுத்துபவர்களா நீங்கள்...2020 ஜனவரி முதல் கூடுதலாக ரூ.118 எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்...
Advertisment
நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ( SBI) க்கு 130 நகரங்களில் 9 மில்லியனுக்கும் அதிகமானோர் வாடிக்கையாளர்களாக உள்ளனர். அதேபோல், தங்களது வாடிக்கையாளர்களுக்கு கிரெடிட் கார்டு சேவை வழங்குவதில், இந்த வங்கி நாட்டிலேயே இரண்டாவது இடத்தில் உள்ளது.
வானத்தை தொட்ட வெங்காய விலை. கவலையில் மக்கள்!
கிரெடிட் கார்டு தவணைகளை, காசோலைகளை கொண்டு கட்டும்போது, அதற்கு ரூ.100 கட்டணம் மற்றும் வரிகளுடன் சேர்த்து, 2020 ஜனவரி மாதம் முதல் ரூ.118 கூடுதலாக கட்ட வேண்டும் என்று தங்களது வாடிக்கையாளர்களுக்கு SBI வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது.
வங்கி வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் குறிப்பாக மூத்த குடிமக்கள், நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் உள்ளிட்ட சேவைகளை தவிர்த்து அதிகளவில் காசோலை மூலமான பணபரிவர்த்தனைகளையே அதிகம் மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள், காசோலைகளை முன்தேதியிட்டு பல இடங்களில் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கிரெடிட் கார்டு தவணைகளை , காசோலைகளின் மூலம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் கட்டணத்தை, வங்கி அறிவித்துள்ள நிலையில், இந்த நடவடிக்கை, காசோலை பயன்பாடுகளின் அடுத்தடுத்த நிகழ்வுகளிலும் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.