நாடு முழுவதும் அமலுக்கு வந்த ஊரடங்கு உத்தரால், பெரும்பாலான தொழில்கள் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இச்சமயத்தில் தான், ஆன்லைன் வியாபாரம் சூடுபிடிக்கத் தொடங்கியது. வொர்க் ப்ரம் ஹோமில் வீட்டியில் முடங்கிய மக்கள்,பெரும்பாலான பொருள்களை ஆன்லைனில் ஆர்டர் செய்ய தொடங்கினர். தற்போது,ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்தாலும், மக்கள் வெளியே செல்வதைத் தவிர்த்து வருகின்றனர்.
இந்நிலையில், பண்டிகை காலம் நெருங்கி வருவதால், ஆன்லைன் விற்பனை ஆயுதத்தை நகைக்கடைக்காரர்களும் கையில் எடுத்துள்ளனர். வாடிக்கையாளர்களுக்குத் தங்கத்தில் முதலீடு செய்ய பல்வேறு சலுகைகளும் அறிவித்து வருகிறது.
'டாடா' குழுமத்தைச் சேர்ந்த, 'தனிஷ்க்' , கல்யாண் ஜூவல்லரி உட்பட பல உள்நாட்டு தங்கநகை விற்பனையாளர்கள், டிஜிட்டல் தங்க தளத்துடன் கூட்டு வைத்து, ஆன்லைன் வாயிலாக குறைந்த விலையில் தங்கத்தை விற்பனை செய்யும் முயற்சியில் களமிறங்கியுள்ளனர். குறைந்தப்பட்சமாக 100 ரூபாய்(1.35 அமெரிக்க டாலர்) செலுத்தித் தங்கத்தை வாங்கும் மக்கள், ஒரு கிராம் அளவுக்கு பணம் காட்டியவுடன் தங்கம் டெலிவரி செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
ஆன்லைன் வாயிலான தங்க விற்பனை இந்தியாவுக்கு ஒன்றும் புதிதானது அல்ல. ஏற்கனவே, போன்பே போன்ற மொபைல் வாலட்கள் மற்றுள் ஆன்லைன் தளங்களான ஆக்மாண்ட் கோல்ட் ஃபார் ஆல், சேஃப் கோல்ட் ஆகியவை தங்கத்தை விற்பனை செய்துவந்தது. எனினும், தங்கநகை கடைக்காரர்கள் ஆன்லைன் விற்பனையில் இருந்து விலகியிருந்தனர். ஏனென்றால், பெரிய தொகை கொடுத்து நகைகளை வாங்குப்படத்தில் நேரில் வருவதையே இந்திய மக்கள் விரும்பிவந்தனர்.
பண்டிகை வந்தாச்சு
இந்தியாவில் பண்டிகை காலம் தொடங்கியுள்ளதால், பெரும்பாலான நகைக்கடைகள் சலுகைகளை வழங்க தொடங்கிவிட்டது. இணையம் வாயிலாக அதிகளவில் பரிவர்த்தனைகள் நடைபெறுவதால், இந்தாண்டு டிஜிட்டல் தங்க விற்பனை சூடிபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து பேசிய கல்யாண் ஜூவல்லரி நிர்வாக இயக்குனர் ரமேஷ் கல்யாணராமன், "தங்கத்தில் முதலீடு செய்ய நுகர்வோர் அதிகளவில் விருப்பம் தெரிவிக்கின்றனர். குறிப்பாக இளைஞர்களிடையே தங்கத்தை மீதான ஆர்வத்தை காண முடிகிறது என்றார்.
ஆக்மாண்ட் கோல்ட்டின் இயக்குனர் கேதன் கோத்தாரி கூறுகையில்,"கொரோனா நகை கடைக்காரர்களின் மனநிலையை முற்றிலுமாக மாற்றிவிட்டது. அவர்கள் ஆன்லைனில் விற்பனை செய்ய ஆவலுடன் இருக்கிறார்கள்.கடந்தாண்டு பிப்ரமரி மாதம் முதல், எங்கள் தளத்தில் 200 விழுக்காடு அதிகமாக விற்பனை நடைபெறுவதைக் காண முடிந்தது. பெரும்பாலான நுகர்வோர் ரூபாய் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரையிலான தங்க நாணயம், பார்களை வாங்க ஆர்வம் காட்டினர்.
தொற்றுநோய் காலக்கட்டத்தில், டிஜிட்டல் வடிவத்தில் தங்கத்தை வாங்குவது பிரபலமடைந்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த பண்டிகை காலத்தில் விற்பனை 20% -30% அதிகரிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என தெரிவித்தார்.