"தங்கத்தின் தேவை குறைந்தாலும், நகைகளின் தேவை குறையவில்லை"

அண்மையில் வெளியான இந்த அறிக்கையின்படி, 2016ம் ஆண்டு, 4362 டன் என இருந்த உலக தங்கத்தின் தேவை, 2017ல் 4072 டன்னாக, அதாவது 7 சதவீதம்...

ஆர்.சந்திரன்

உலக அளவில் தங்கத்தின் தேவை, கடந்த 2017ம் ஆண்டில் குறைந்திருந்தாலும், நகைகளின் தேவை அதிகரித்திருந்ததாக உலக தங்கக் கவுன்சில் தனது ஆண்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது

அண்மையில் வெளியான இந்த அறிக்கையின்படி, 2016ம் ஆண்டு, 4362 டன் என இருந்த உலக தங்கத்தின் தேவை, 2017ல் 4072 டன்னாக, அதாவது 7 சதவீதம் குறைந்துள்ளது. கோல்ட் ஈடிஎப் எனப்படும், தங்கம் சார்ந்த மறைமுக முதலீட்டு வாய்ப்புகளில் மக்களது கவனம் குறைந்ததே இதற்கு காரணம் எனவும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

பல்வேறு நாடுகளின் மைய வங்கிகள் தங்கம் வாங்குவதும் கடந்த ஆண்டு குறைந்துள்ளதாம். துருக்கி, ரஷ்யா, கஸகிஸ்தான் போன்ற நாடுகள்தான் கடந்த ஆண்டின் முக்கிய வாடிக்கையாளர்கள் எனவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. ஆபரணத் தேவையைப் பொறுத்தவரை வழக்கம் போல, சீனாவும், இந்தியாவும் முன்னணியில் உள்ளன.

அந்த நாடுகளின் பொருளாதார நிலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றமும் இதற்கு ஒரு காரணம் என அந்த அறிக்கை தெரிவிக்கிறது. கடந்த ஆண்டில் உலக அளவில் 2136 டன் அளவுக்கு தங்க நகைத் தேவை இருந்தது என்றும், முழு ஆண்டில் 82 டன் அளவுக்கு தேவை அதிகரிக்க, அதில் 75 டன் கூடுதல் தேவை இந்தியா, சீனாவில் இருந்து வந்தது எனவும் உலக தங்க கவுன்சில் தெரிவிக்கிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Business news in Tamil.

×Close
×Close