Advertisment

ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு உதவும் ஜியோ- மைக்ரோசாஃப்ட் கூட்டணி

புதிதான கண்டுபிடிப்புகளுக்கும் வளர்ச்சிக்கும் இந்தக் கூட்டணி உதவும் - சத்ய நாதெல்லா

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Reliance industries limited announced JioGigafiber services

Reliance industries limited announced JioGigafiber services

Jio and Microsoft will help the startup says reliance chief : ஜியோவின் 42-வது வருடாந்திர மாநாட்டில் கருத்து தெரிவித்த அந் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடனான நீண்ட கால கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

Advertisment

மேலும் அவர் கூறுகையில்,சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் செலவைக்குறைக்கும் வகையில், சாஃப்ட்வேர்-ஹார்டுவேர் சேவைகளை வெறும் 1,500 ரூபாய்க்கு வழங்கப்படும். என்றார்.  இந்த மாநாட்டில், வெளியிடப்பட்ட அறிவிப்பில், ஜியோ- மைக்ரோசாஃப்ட் கூட்டணி மூலம் புதிதாக உருவாகும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு மைக்ரோசாஃப்ட்-ன் க்ளவுட் சேவை மற்றும் இணைய சேவை ஆகியவை இலவசமாகவே கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : Jio GigaFiber : ஜியோ ஜிகாஃபைபர் கனெக்சனை பெறுவது எப்படி?

ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ஜியோ ஃபைபரின் சேவை உடன் மைக்ரோசாஃப்ட் சேவையும் இலவசமாகவே வழங்கப்படவுள்ளது. இதேபோல், கவனம் ஈர்க்கும் ஸ்டார்ட்அப் ஐடியாக்கள் மீது முதலீடு செய்யவும் தயாராக இருப்பதாக ஜியோ அறிவித்துள்ளது.

இந்நிலையில்,“Azure, Azure AI மற்றும் Office 365 ஆகியவற்றின் திறனை ஜியோ உடனான கூட்டணி மூலம் இனி இந்தியாவின் பல தொழில்களுக்கும் அளிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. புதிதான கண்டுபிடிப்புகளுக்கும் வளர்ச்சிக்கும் இந்தக் கூட்டணி உதவும்” என மைக்ரோசாஃப்ட் நிறுவனத் தலைவர் சத்யா நாடெல்லா தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க : இந்த கனெக்சன் வாங்குறவங்களுக்கு ஒரு எல்.இ.டி டிவி ஃப்ரீ, ஃப்ரீ, ஃப்ரி – ஜியோவின் புதிய அறிவிப்பு

Jio Reliance Jio
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment