Jio customer alert : டிஜிட்டல் உலகில் நாம் அனைவரும் வாழ்ந்து வருகிறோம். சில நேரங்களில் வங்கிகளில் இருந்து அழைக்கின்றோம் உங்களின் வங்கிக் கணக்கு எண் சொல்லுங்கள், ஆதார் அடையாள அட்டை எண் சொல்லுங்கள், எ.டி.எம். பின் எண்கள் என்னவென்று கூறுங்கள் என்று மோசடி அழைப்புகள் வரும். வயதானவர்கள், டிஜிட்டல் உலகம் எப்படி இயங்குகிறது, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை குறித்து அதிகம் தெரியாத நபர்கள் இந்த அழைப்புகளை நம்பி ஏமாந்துவிடுவதும் தங்களின் பணம் மற்றும் தனிப்பட்ட விபரங்களை தொலைப்பதும் வாடிக்கையாகிவிட்டது.
தற்போது புதிதாக கே.ஒய்.சி. சரிபார்க்கின்றோம் எனவே இந்த செயலியை உடனே டவுன்லோடு செய்யுங்கள் என்று எஸ்.எம்.எஸ்.களும் அனுப்பப்படுகிறது. பொதுமக்கள் அதனை நம்பி எந்தவிதமான செயலிகளையும் டவுன்லோடு செய்யாதீர்கள். மேலும் அதில் உங்களின் ஆதார் அடையாள அட்டை எண் மற்றும் இதர தகவல்களை உள்ளீடாக தர வேண்டாம் என்றும் ஜியோ சமீபத்தில் அறிவித்துள்ளது.
மேலும், இது போன்ற செயலிகளை தரவிறக்கம் செய்யுங்கள் என்று ஜியோ தங்களின் வாடிக்கையாளர்களுக்கு எப்போதும் அழைப்பு விடுப்பதில்லை என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். இது போன்ற மோசடி அழைப்புகளில் இருந்து உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்றும் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது ஜியோ.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil