ஜியோ ஃபோனிற்கு 50% சதவீத கேஸ்பேக் ஆஃபர்!

அமேசான் பே மூலம் செலுத்தினால் அதில் வாடிக்கையாளர்களுக்கு 50 சதவீதம் கேஸ்பேக் சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது

முன்னணி ஷாப்பிங் தளமான அமேசானில் , ரிலையன்ஸ் ஜியோவின் ஃபீச்சர் போனிற்கு 50 சதவீத கேஷ்பேக் ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது.

டெலிகாம் சந்தையில் ஜியோவின் வருகைக்கு பின்னர், பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. ரீசார்ஜ் திட்டங்களில் ஜியோவின் கேஸ்பேக் ஆஃபர், கிஃபுட் வவுச்சர்கள், ரீசார்ஜ் கூப்பன்கள் போன்றவை வாடிக்கையாளர்களை பெருமளவில் கவர்ந்தது. இதனால், டெலிகாம் சந்தையில் முன்னணியில் இருந்த ஏர்டெல், வோடஃபோன், ஏர்செல் போன்ற நிறுவனங்கள் பெரும்பான்மையான வாடிக்கையாளர்களை இழந்தனர். அதன் பின்பு, மற்ற நிறுவனங்களும் ஜியோவின் வழியை பின் தொடர்ந்தனர்.

டெலிகாம் சந்தையை தொடர்ந்து, ஜியோ ஸ்மார்ஃபோனை கையில் எடுத்தது. இதன்படி, 4ஜி ஸ்மார்ஃபோனை ஜியோ நிறுவனம், கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. ரூ.1500 வைப்புத் தொகையை முன்பணமாக செலுத்தி ஃபோனை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவித்திருந்தது. ஜியோவின் இந்த அதிரடி அறிவிப்பு பிரபல் மொபைல் நிறுவனங்களை அதிர்ச்சியடைய வைத்தது. ஜியோவின் இந்த ஃபீச்சர் ஃபோனிற்கான முன்பதிவு விரைவாக நடைபெற்றது.

பேசிக் ஃபோன் தோற்றத்தில் ஸ்மார்ஃபோன் வழங்கூடிய அனைத்து வசதிகளையும் வழங்கிய முதல் ஃபீச்சர் ஃபோன் ரிலையன்ஸின் ஜியோவே ஆகும். ஜியோவின் முதல்கட்ட முன்பதிவு ஏற்கனவே முடிவடைந்த நிலையில், தற்போது இதன் விற்பனை மீண்டும் அமேசான் தளத்தில் துவங்கியுள்ளது. இந்த விற்பனையில் ரூ.1500 தொகையை அமேசான் பே மூலம் செலுத்தினால் அதில் வாடிக்கையாளர்களுக்கு 50 சதவீதம் கேஸ்பேக் சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

×Close
×Close