Jio Tamil News: கோவிட்-19 தொற்று நோய் பரவல் காலத்தில் வீட்டிலிருந்து வேலை பார்ப்பதற்கு இணையம் ஒரு தேவையாக மாறியுள்ளது. இந்த சூழலில் ரிலையன்ஸ் ஜியோ தனது பயனர்களுக்கு சில டேட்டா திட்டங்களுடன் வந்துள்ளது. ரூபாய் 149 முதல் ரூபாய் 4,999 வரை பல்வேறு திட்டங்களை ஜியோ அறிமுகப்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களது பல்வேறு தேவைகளுக்கு ஏற்ப எந்த திட்டத்தை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பத்தில் உள்ளனர். இந்த செய்தியில் சில பிரபலமான ரிலையன்ஸ் ஜியோ ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் மற்றும் அவற்றின் நன்மைகள் குறித்துப் பார்க்கலாம்.
ரூபாய் 149 ஜியோ திட்டம்
இந்த திட்டத்தில் தினமும் 1GB இணைய டேட்டா 4G வேகத்தில் 24 நாட்களுக்கு வழங்கப்படும். மேலும் பெரும்பாலான ஜியோ திட்டங்களைப் போல இந்த திட்டத்திலும் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு இடையில் அளவில்லாத இலவச அழைப்புகள் செய்யும் வசதியையும் 24 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ஜியோ எண்ணிலிருந்து ஜியோ அல்லாத எண்களுக்கு செய்யும் அழைப்புகளுக்கு 5 மணிநேரம் இலவசமாக பேசும் வசதியும் வழங்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 100 இலவச குறுஞ்செய்திகள் அனுப்பும் வசதியும் வழங்கப்படுகிறது.
முழுக்க முழுக்க வாடிக்கையாளர்களுக்காகவே... அசத்தும் ஸ்டேட் பேங்க்!
ரூபாய் 199 ஜியோ திட்டம்
28 நாட்கள் வேலிடிட்டியுடன் வரும் இந்த திட்டத்தில் தினமும் 1.5 GB டேட்டா வழங்கப்படுகிறது. ஜியோ எண்ணிலிருந்து ஜியோ அல்லாத எண்களுக்கு செய்யும் அழைப்புகளுக்கு 1000 நிமிடங்கள் இலவசமாக பேசும் வசதியும் வழங்கப்படுகிறது. ஜியோ ஆப்களுக்கான இலவச சந்தா வசதியும் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. ரூபாய் 149 திட்டத்தில் வழங்கப்படும் பயன்களோடு ஒப்பிடும் போது இந்த திட்டத்துக்கு கூடுதலாக ரூபாய் 50 செலவு செய்வது தப்பானது ஒன்றும் இல்லை.
ரூபாய் 399 ஜியோ திட்டம்
இந்த திட்டத்தில் 1.5 GB டேட்டா 56 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ஜியோ எண்ணிலிருந்து ஜியோ அல்லாத எண்களுக்கு செய்யும் அழைப்புகளுக்கு 2000 நிமிடங்கள் இலவசமாக பேசும் வசதியும் இந்த திட்டத்தில் உள்ளது. ஜியோ ஆப்களுக்கான இலவச சந்தா மற்றும் 100 இலவச குறுஞ்செய்திகளும் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.
ரூபாய் 444 ஜியோ திட்டம்
கூடுதலாக 0.5 GB டேட்டா அதாவது 2GB டேட்டா இந்த திட்டத்தில் 56 நாட்களுக்கு வழங்கப்படும். இந்த திட்டத்தில் வழங்கப்படும் மற்ற அனைத்து சலுகைகளும் ரூபாய் 399 திட்டத்தில் வழங்கப்படுவது போலவே வழங்கப்படுகிறது.
ரூபாய் 599 திட்டம்
மூன்று மாதங்களுக்கு தங்கள் கைபேசியை ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த திட்டம் வசதியாக இருக்கும். தினமும் 2 GB டேட்டா வீதம் 84 நாட்களுக்கு 4G வேகத்திலான டேட்டா வழங்கப்படுகிறது. ஜியோ எண்ணிலிருந்து ஜியோ அல்லாத எண்களுக்கு அழைப்பதற்கான இலவச பேசும் நேரம் 3000 நிமிடங்களாக இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.
கடன் வேண்டுமா? போன் செய்யுங்கள் போதும்! கலக்கும் எஸ்பிஐ
ரூபாய் 999 திட்டம்
அதிகப்படியான நேரம் இணையத்தில் செலவிடும் பயனர்கள் இந்த திட்டத்தை தேர்வு செய்யலாம். இந்த திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 3 GB டேட்டா வீதம் 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் உள்ள மற்ற அம்சங்கள் மற்றும் சலுகைகள் ரூபாய் 599 திட்டத்தில் உள்ளது போலவே வழங்கப்படுகிறது.
ரூபாய் 2599 திட்டம்
ஒரு முழு வருடத்துக்கு தினம்தோறும் 2 GB டேட்டா வழங்கப்படுவதே இத்திட்டத்தின் சிறப்பம்சமாகும். தினம்தோறும் வழங்கப்படும் 2 GB டேட்டா வரம்பு தவிர பயனர்கள் 10 GB உபரி டேட்டாவையும் இந்த திட்டத்தில் பெறுவார்கள். பயனர்கள் வசதிக்கு ஏற்ப அவற்றின் பயன்பாட்டைக் கொண்டு வர முடியும். மேலும் ஜியோ அல்லாத எண்களுக்கு இலவசமாக 12000 நிமிடங்கள் அழைக்கும் வசதியும் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.