முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஜியோ ஹோம் டிவி, மலிவான விலையில் ஹெச்டி சேனல்களை வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது.
டெலிகாம் துறையில் அதிரடியான பல மாற்றங்களை செய்து வரும் ஜியோல் நிறுவனம், அடுத்தபடியாக டிடிஹெச் சேவையில் இறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜியோ ஹோம் என்ற பெயரில் புது சேவை வழங்கப்பட உள்ளதாகவும் இதில், மலிவான விலையில் வாடிக்கையாளர்களுக்கு ஹெச்டி சேனல்கள் வழங்கப்ப்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய டிடிஹெச் துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த சேவை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஜியோ ஹோம் டிவி (Jio Home TV) எனப்படும் இந்த சேவையில் ரூ.200-க்கு சாதாரண டிவி சேனல்களும், ரூ.400- க்கு ஹெச்.டி சேனல்களும் வழங்கப்படும். மேலும் இந்த சேவை இஎம்பிஎம்எஸ் எனப்படும் நவீன தொழில்நுட்பத்தில் அடிப்படையில் செயல்படும்.
ஜியோ டிடிஹெச் சேவைக்கு பதில் இந்த சேவை வெளிவர உள்ளதாக தெரிகிறது. ரிலையன்ஸ் ஜியோ விரைவில் ஜியோ ஹோம் டிவி சேவை பற்றிய தகவல்களையும் சேவையையும் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜியோ ஹோம் என்ற பெயரில் ஜியோ வழங்க இருப்பதாக கூறப்படும் புதிய சேவை அந்நிறுவனத்தின் அடுத்த பெரிய திட்டம் என்றும் கூறப்படுகிறது.
ரிலையன்ஸ் ஜியோவின் புதிய சேவை அனைத்து ஜியோ பயனர்களுக்கும் வழங்கப்படும் என்றும் இந்த சேவை ஜியோ ஹோம் டிவி என்ற பெயரில் பிரான்டிங் செய்யப்படும் என கூறப்படுகிறது.