New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/04/baby.jpg)
இந்நிலையில் இந்த வழக்குகளை முடித்து வைக்க, ரூ.890 கோடி வழங்க இந்நிறுவனம் முன்வந்துள்ளது. அமெரிக்க வரலாற்றில் இவ்வளவு தொகையை நஷ்ட ஈடாக எந்த நிறுவனமும் வழங்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.
ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம், தனக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க ரூ. 890 கோடி இழப்பீடாக வழங்க உள்ளது.
குழந்தைகளுக்கான பவுடர், ஷாம்பூ, எண்ணெய் ஆகியவற்றை விற்பனை செய்யும் நிறுவனம் ஜான்சன் அண்ட் ஜான்சன். இதன் தயாரிப்புகள் உலகம் முழுவதிலும் பிரபலம். மேலும் இந்தியாவிலும் பிரபலமாக உள்ளது. இந்நிலையில் ஜான்சன் அண்ட் ஜான்சன் பொருட்களை பயன்படுத்திய பெண்களுக்கு கருப்பை புற்று நோய் ஏற்பட்டுள்ளதாவும், நுரையீரல் மற்றும் உடல் உறுப்புக்களை பாதிக்கும் புற்றுந்நோய்களும் ஏற்படுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளனர்.
கிட்டதட்ட 60,000 வழக்குகள் இந்த நிறுவனத்திற்கு எதிராக தொடரப்பட்டுள்ளது. ‘பல ஆண்டுகள் வழக்குகளுக்கு எதிராக வாதாடுவது, செலவுகளை அதிகப்படுத்தும். மேலும் அதிக தொகை செலவாகும்’என்று அந்நிறுவனத்தின் துணை தலைவர் எரிக் ஹாஸ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த வழக்குகளை முடித்து வைக்க, ரூ.890 கோடி வழங்க இந்நிறுவனம் முன்வந்துள்ளது. அமெரிக்க வரலாற்றில் இவ்வளவு தொகையை நஷ்ட ஈடாக எந்த நிறுவனமும் வழங்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.
இந்த முடிவை அந்நிறுவனம் நேற்று அறிவித்தது. அறிவித்த சில மணி நேரங்களிலேயே, அந்நிறுவனத்தின் பங்குகள் 3 % அதிகரித்தன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.