Advertisment

கலாநிதி மாறனுக்கு ரூ.380 கோடி: ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் வழங்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

பிப்ரவரி 13 ஆம் தேதி உச்ச நீதிமன்ற உத்தரவின்படி ரூ 362.49 கோடியாக இருந்த வட்டி இப்போது ரூ 380 கோடியாக அதிகரித்துள்ளதாகவும் மாறன் உயர்நீதிமன்றத்தில் சமர்பித்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Business

Delhi High Court directs SpiceJet to pay outstanding interest to Kalanidhi Maran

ஸ்பைஸ்ஜெட் நிறுவனம், அதன் முன்னாள் உரிமையாளரான கலாநிதி மாறனுக்கு, 380 கோடி ரூபாய் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன், தன்னிடம் இருந்த ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் 58.46 சதவீதப் பங்குகளை அதன் நிறுவனர் அஜய் சிங்குக்கு கடந்த 2015 ஆம் ஆண்டுக்கு முன்பு விற்பனை செய்தார்.

அப்போது, செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி நிறுவனத்துக்காக தான் மேற்கொண்ட நடைமுறைச் செலவுகள், கடன் தவணை செலுத்தியது உள்ளிட்டவற்றுக்காக ரூ.679 கோடியை அஜய் சிங் வழங்க வேண்டுமென்று கோரி மாறன் தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கு நீண்ட நாட்களாக நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில், கலாநிதி மாறனுக்கு அசல் தொகையான ரூ.579.08 கோடியை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் வழங்கியது. ஆனால் வட்டி நிலுவையில் இருந்தது.

பிப்ரவரி 13 ஆம் தேதி உச்ச நீதிமன்ற உத்தரவின்படி ரூ 362.49 கோடியாக இருந்த வட்டி இப்போது ரூ 380 கோடியாக அதிகரித்துள்ளதாகவும் மாறன் உயர்நீதிமன்றத்தில் சமர்பித்தார்.

இந்நிலையில், ஸ்பைஸ்ஜெட் 75 கோடியை செலுத்துவதற்கு மேலும் மூன்று மாதங்களுக்கு கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று அவர்கள் ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

2022-23ம் நிதியாண்டின் டிசம்பர் காலாண்டில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் வருவாய் நான்கு மடங்கு அதிகரித்து ரூ. 106.8 கோடியாக இருந்தது. அதன் பங்குகள் 3.95% அதிகரித்து ரூ. 26.85க்கு வர்த்தகமாகி வருகிறது.

இந்த சூழலில், டெல்லி உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள இந்த தீர்ப்பு ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்திற்கு ஒரு பின்னடைவாக அமையும் என கூறப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Kalanithi Maran
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment