கீதாஞ்சலி ஜெம்ஸ் விளம்பரத்தில் நடித்ததிற்கு சம்பளம் பாக்கி: பிரபல நடிகைகள் புகார்!

இன்று வரை தங்களுக்கும் சம்பள பாக்கி இருப்பதாக நடிகைகள் கங்கனா ரணாவத் மற்றும் பிபாஷா பாசு தெரிவித்துள்ளனர்.

கீதாஞ்சலி ஜெம்ஸ் விளம்பரத்தில் நடித்ததிற்கு தற்போது வரை உரிய சம்பளத்தொகையை அளிக்கவில்லை என்று பாலிவுட் நடிகைகள் கங்கனா ரணாவத் மற்றும் பிபாஷா பாசு புகார் அளித்துள்ளனர்.

கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தின் விளம்பர தூதுவராக பாலிவுட் நடிகைகள் பலர் இருந்துள்ளனர். 2004 ஆண்டு,முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யாராய், 2008-ம் ஆண்டு காட்ரீனா கைப் ஆகியோர் கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தின் விளம்பர தூதுவராக பல்வேறு விளம்பரங்களில் நடித்திருந்தனர்.

தற்போது, பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,500 கோடி மோசடி செய்ததாக பரப்பரப்பாக பேசப்பட்டு வரும், நீரவ் மோடியின் நகை கடை விளம்பரத்தில் நடித்ததற்குச் சம்பளம் பாக்கி இருப்பதாக சமீபத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து, நீரவ் மோடியின் மாமாவான மெகுல் சோக்ஸியின் கீதாஞ்சலி ஜெம்ஸ் விளம்பரத்தில் நடித்ததிற்கு இன்று வரை தங்களுக்கும் சம்பள பாக்கி இருப்பதாக நடிகைகள் கங்கனா ரணாவத் மற்றும் பிபாஷா பாசு தெரிவித்துள்ளனர்.

2008-ம் ஆண்டுக் கிலிஸ் விளம்பர தூதராகப் பிபாஷா பாசு இருந்த போது சில புகைப்படங்களை எடுத்துள்ளார். அந்த படங்களை ஒப்பந்த காலம் முடிவடைந்த பிறகும் பயன்படுத்தியதாகவும் , இதுக்குறித்து  தான் கேட்டதற்கு, புதிய அதற்கான உரிய தொகை வழங்கப்படும் என்று அந் நிறுவனம் சார்பில் கடிதம் அனுப்பபட்டுள்ளது. அதே போல், நடிகை கங்கனா ரணாவத்தும், தான் நடித்த விளம்பரங்களை ஒப்பந்த காலம் முடிந்த பின்பு அந்நிறுவனம் பயன்படுத்தியாக குற்றம்சாட்டியுள்ளனர்.

இவர்கள், இருவரும் வழங்க வேண்டிய தொகை தற்போது வரை வழங்கப்படவில்லையாம். இந்நிலையில், மெகுல் சோக்ஸி போலி வைரங்களை விற்பனை செய்ததாக, கீதாஞ்சலி ஜெம்ஸ் முன்னாள் இயக்குநர் ஸ்ரீவாஸ்தவா குற்றம்சாட்டியுள்ளார்.

Get all the Latest Tamil News and Business News in Tamil at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close