கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மலர் சந்தையாக தோவாளை மலர் வணிக வளாகம் இருந்து வருகிறது. இங்கு ஓசூர், சேலம், ராயக்கோட்டை, மதுரை, திண்டுக்கல் மற்றும் உள்ளூர்களான தோவாளை, செண்பகராமன்புதூர், ஆரல்வாய்மொழி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் விற்பனைக்காக இங்கு மலர்கள் கொண்டுவரப்படுகிறது. கொள்முதல் விலையில் பூக்கள் வாங்க பல்வேறு பகுதிகளிலிருந்தும் வியாபாரிகள் வருவர். தமிழ்நாடு மட்டுமல்லாது அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் வியாபாரிகள் வந்து அதிக அளவில் பூக்களை வாங்கி செல்வர். இந்நிலையில் இன்று முகூர்த்த நாள் என்பதால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. கார்த்திகை மாதம் என்பதால் பனிப்பொழிவு அதிகம் இருப்பதால் வரத்து குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதனால் பூக்களின் விலையும் அதிகரித்துள்ளது. கடந்த வாரங்களில் ரூ.500, 600-க்கு விற்பனையான மல்லிகைப் பூ நேற்று ரூ.1500-க்கு விற்பனையானது. ஆனால் இன்று முகூர்த்த நாள் என்பதால்
2000 ரூபாய் உயர்ந்து 3500 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதேபோல் பிச்சி பூ1500க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கிரேந்தி- ரூ.100
செவ்வந்தி- ரூ.140
அரளி- ரூ. 250
ரோஜா- ரூ. 250-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் அனைத்து பூக்களின் விலையும் அதிகரித்துள்ளது. இதனால் பூ வியாபாரிகளும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கேரளா மாநிலங்களில் நடைபெறும் திருவிழா மற்றும் திருமண விழாக்களுக்கு பெரும்பாலும் தோவாளை பூ சந்தையில் இருந்து தான் பூக்கள் வாங்கிச் செல்லப்படுகிறது.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil