1 வருடமாக ஊழியர் செய்து வந்த நூதன மோசடியை கண்டுப்பிடிக்காத அமேசான்!

அமேசானுக்கு பணம் சென்றுவிட்டதாக மெசேஜ் மட்டும் செல்லும். இப்படித்தான் இவர் மோசடியை செய்து இருக்கிறார்

அமேசான் நிறுவனத்தின், டெலிவரி பாய் கடந்த ஆண்டிலிருந்து  செய்து வந்த நூதன மோசடியை அந்நிறுவனம் தற்போது கண்டுப்பிடித்துள்ளது.

புகழ்பெற்ற ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான,  அமேசானில்  நாம் ஆர்டர் செய்யும் பொருட்களை டெலிவரி பாய்கள்  வந்து டெலிவரி செய்வார்கள்.  டெலிவரி செய்பவர்களிடம்,  அந்நிறுவனம்  லேப்டாப் மற்றும்  கிரெடிட் கார்ட் மற்றும் டெபிட் கார்டுகளை ஸ்வைப் செய்யும் மிஷினையும்  தருவது வழக்கம்.

இந்நிலையில், அமேசான் நிறுவனத்தில் பணிப்புரிந்து வந்த தர்ஷன் என்ற இளைஞர் அமேசான் நிறுவனத்தை ஏமாற்றி 1 கோடி வரையில் மோசடி செய்துள்ளார். 10 வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள இவர், கடந்த 2 ஆண்டுகளாக அமேசான் நிறுவனத்தில் பணிப்புரிந்து வந்துள்ளார்.

இவர், சில தொழில் நுட்பங்களை பயன்படுத்தில்,  அமேசான் நிறுவனம்  தந்துள்ள  கார்ட் ஸ்வைப்பிங் மிஷினை ஹாக் செய்துள்ளார். அதன் பின்பு இவரின் நண்பர்களிடம்  அமேசானில் இருக்கும் விலையுர்ந்த பொருட்களை  புக் செய்யும்படி கூறியுள்ளார்.அந்த பொருட்களை இவரே டெலிவரியும் செய்துள்ளார்.

அதற்கான பணத்தை அவர்கள் கார்ட் வழியாக  செலுத்தி விட்டதாக மெசேஜ் செல்லும். ஆனால் உண்மையில் வாடிக்கையாளர் கார்டில் இருந்து பணம் எடுக்கப்படாது. ஆனால் அமேசானுக்கு பணம் சென்றுவிட்டதாக மெசேஜ் மட்டும் செல்லும். இப்படித்தான் இவர் மோசடியை செய்து இருக்கிறார்.

இதுப்போன்று சுமார், 1 வருடமாக  தர்ஷன் இந்த நூதன மோடடியில் ஈடுப்பட்டு வந்துள்ளார். இந்த மோசடியை அந்நிறுவனம் 1 வருடமாக கண்டுப்பிடிக்காமல் இருந்துள்ளது. சில தினங்களுக்கு  முன்பு, அமேசான் நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் நிறைவடைந்த காலாண்டு கணக்கை சரிபார்த்த போது, தர்ஷன் செய்து வந்த பெரும்  மோசடி கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

அந்நிறுவனம் அளித்த புகாரின் அடிப்படையில் தர்ஷன் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் .

×Close
×Close