கேரளத்தின் கோடைக்கால பம்பர் லாட்டரி முடிவுகள் இன்று வெளியாகின்றன. இதனால், முதல் பரிசு ரூ.10 கோடியை வெல்லப் போகும் அதிருஷ்டசாலி யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.
கேரள அரசின் சார்பில் இந்த லாட்டரி நடத்தப்பட்டுவருகிறது. ஆண்டுக்கு 6 பம்பர் குலுக்கல்களையும் நடத்திவருகிறது. இதில் கோடிக்கணக்கான பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த லாட்டரி சீட்டு முடிவுகளுக்கு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை சேர்ந்த மக்களும் காத்திருக்கின்றனர். கோடைக்கால பம்பர் லாட்டரி டிக்கெட் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த லாட்டரி சீட்டுகள் ஜனவரி 24ஆம் தேதி அம்மாநில அமைச்சர் கே.என். பாலகோபால் அறிமுகப்படுத்தினார். இந்த லாட்டரி சீட்டின் முல் பரிசு ரூ.10 கோடி ஆகும்.
இரண்டாம் பரிசு ரூ.50 லட்சம் ஆகும். இந்த லாட்டரி சீட்டின் விலை ரூ.250 ஆகும். இந்தச் சீட்டுக்கான குலுக்கல் வழக்கம்போல் திருவனந்தபுரத்தில் உள்ள கார்க்கி பவனில் நடைபெறுகிறது.
மேலும், SA, SB, SC, SD, SE மற்றும் SG ஆகிய 6 சீரிஸ்களில் இந்த குலுக்கல் நடைபெறுகிறது. முடிவுகள் மதியம் 2 மணிக்கு அறிவிக்கப்படும்.
இந்தக் குலுக்கலில் 3ம் பரிசாக ரூ.5லட்சம் 12 பேருக்கு வழங்கப்பட உள்ளது.
முன்னதாக, திருவோணம் பம்பர் மற்றும் பூஜா பம்பர் ஆகிய லாட்டரி டிக்கெட்டுகளை தமிழகத்தை சேர்ந்தவர்கள் வென்றனர் என்பது நினைவு கூரத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“