கேரள மாநில லாட்டரி துறை, தனலட்சுமி DL-5 லாட்டரியின் முடிவுகளை இன்று (ஜூன் 11, 2025) அறிவிக்க உள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள பேக்கரி ஜங்ஷன் அருகே இருக்கும் கோர்க்கி பவனில் பிற்பகல் 3 மணியளவில் லாட்டரி குலுக்கல் நடைபெற உள்ளது.
வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில், அதிகாரப்பூர்வ நீதிபதிகள் குழு இந்த நிகழ்வை மேற்பார்வையிடும். முதல் பரிசு ரூ. 1 கோடியாகவும், இரண்டாம் பரிசு ரூ. 50 லட்சமாகவும், மூன்றாம் பரிசு ரூ. 20 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கேரள தனலட்சுமி DL-5 லாட்டரி முடிவுகளை சரிபார்ப்பது எப்படி?
தனலட்சுமி DL-5 லாட்டரி முடிவுகளை கேரள அரசு கெசட் அலுவலகத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம்.
வெற்றி பெற்ற எண்களின் அதிகாரப்பூர்வ பட்டியல் கேரள லாட்டரி இணையதளத்திலும் வெளியிடப்படும் (keralalottery.info).
இதன் முடிவுகளை இணையதளத்திலிருந்து பி.டி.எஃப் வடிவத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
உங்கள் பரிசு தொகையை கோருவது எப்படி?
வெற்றி பெற்றவர்கள் தங்கள் டிக்கெட் எண்ணை கேரள அரசு கெசட்டில் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ முடிவுகளுடன் சரிபார்க்க வேண்டும்.
டிக்கெட் எண் பொருந்தினால், அவர்கள் திருவனந்தபுரத்தில் உள்ள கோர்க்கி பவனில் இருக்கும் கேரள லாட்டரி அலுவலகத்திற்கு செல்ல வேண்டும்.
பரிசை பெறுவதற்கு, அசல் டிக்கெட் மற்றும் அடையாள சான்று (ID proof) சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
அனைத்து பரிசு கோரிக்கைகளும் குலுக்கல் நடந்த நாளிலிருந்து 30 நாட்களுக்குள் செய்யப்பட வேண்டும்.
பரிசுத் தொகையை கோரத் தேவையான ஆவணங்கள்:
முன்பக்கமும் பின்பக்கமும் சுய சான்றொப்பமிடப்பட்ட அசல் லாட்டரி டிக்கெட்.
அரசு அதிகாரியால் சான்றொப்பமிடப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.
வரி நோக்கங்களுக்காக பான் கார்டின் சுய சான்றொப்பமிடப்பட்ட நகல்.
ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு போன்ற அடையாள மற்றும் முகவரிச் சான்று.
முறையாக பூர்த்தி செய்யப்பட்ட பரிசு தொகை ரசீது படிவம் (ஆன்லைனில் கிடைக்கும்) உள்ளிட்டவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
முழு வெற்றி எண்களின் பட்டியலுடன் பி.ஃபி.எஃப்-ஐ பதிவிறக்கம் செய்வது எப்படி?
கேரள லாட்டரியின் அதிகாரப்பூர்வ இணையதளங்களுக்கு செல்லவும் (keralalottery.info அல்லது keralalotteryresult.net).
தனலட்சுமி DL-5 லாட்டரி முடிவுகளுக்கான இணைப்பை கிளிக் செய்யவும்.
முடிவுகள் பக்கத்தில் காட்டப்படும் முழு வெற்றி எண்களின் பட்டியலை சரிபார்க்கவும்.
இந்த ஆப்ஷனில் பி.டி.எஃப்-ஐ பதிவிறக்கம் செய்யலாம்.
வெற்றிபெற்ற எண்கள்:
ரூ. 1 கோடி முதல் பரிசு - DC 182932
ரூ. 30 லட்சம் இரண்டாம் பரிசு - DC 539549
ரூ. 5 லட்சம் மூன்றாம் பரிசு - DD 239214