Advertisment

உறவினர் வீட்டில் கிடைத்த அதிஷ்டம்: கேரளா லாட்டரியில் ரூ25 கோடி வென்ற கர்நாடக மெக்கானிக்!

உறவினர் வீட்டுக்கு சென்றபோது லாட்டரி டிக்கெட் வாங்கிய மெக்கானிக் ஒருவருக்கு ரூ25 கோடி பரிசு விழுந்துள்ளது.

author-image
WebDesk
New Update
Kerala State Lottery Result Today 05 05 2024 Akshaya AK 650

தமிழ்நாட்டில் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை தடை செய்யப்பட்டிருந்தாலும், அண்டை மாநிலமான கேரளாவில் லாட்டரி விற்பனை படு பயங்கராமாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் இருந்து சுற்றுலா அல்லது இதர வேலையாக கேரளா செல்பவர்கள் அங்கிருந்து லாட்டரி டிக்கெட்டுகள் வாங்கி வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். 

Advertisment

அதேபோல் மற்ற மாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு செல்பவர்களும் லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கி செல்கின்றனர். இதனிடையே சமீபத்தில், கேரளாவில், ஒணம் பண்டிகை கொண்டாட்டம் நடைபெற்ற நிலையில, இந்த பண்டிகைக்காக ரூ25 கோடி மதிப்புள்ள, பரிசுத்தொகை கொண்ட, லாட்டரி டிக்கெட்டுகள் கேரளா லாட்டரி துறை அறிவித்தது. இதற்காக 80 லட்சம் டிக்கெட்டுகள் அச்சடிக்கப்பட்ட நிலையில், இதில் 70-லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது.

இந்த லாட்டரி டிக்கெட்டுக்களுக்கான குலுக்கல், திருவனந்தபுரத்தில் உள்ள லாட்டரித்துறை அலுவலகத்தில், நிதித்துறை அமைச்சர் பாலகோபால் தலைமையில், நடைபெற்றது. இதில் டி.ஜி.434222 என்ற எண் கொண்ட லாட்டரி டிக்கெட்டுக்கு ரூ25 கோடி பரிசு விழுந்துள்ளது. கேரளா மாநிலம் வயநாடு பத்தேரி பகுதியை சேர்ந்த, நாகராஜ் என்ற ஏஜெணட் மூலம் இந்த லாட்டரி டிக்கெட் விற்பனை நடைபெற்றதாக கண்டறியப்பட்டது. ஆனால் இந்த டிக்கெட்டை வாங்கியது யார் என்ற விபரம் தெரியாமல் இருந்துள்ளது,

இதனிடையே தற்போது கர்நாடக மாநிலம் பாண்டியாபுரா பகுதியை சேர்ந்த மெக்கானிக் அல்தாப் என்பவர் தான் இந்த லாட்டரி டிக்கெட்டை வாங்கியுள்ளதாகவும், அவருக்குதான் தற்போ ரூ25 கோடி பரிசு விழுந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக லாட்டரி வாங்கி வருவதாகவும், வயநாடு பகுதியில் உள்ள உறவவினர் வீட்டுக்கு சென்றபோது இந்த லாட்டரி டிக்கெட்டை அவர் வாங்கியதாகவும் கூறப்படுகிறது. இவருக்கு ரூ25 கோடி லாட்டரியில் அதிஷ்டம் அடித்துள்ளது.

2-வது பரிசாக, 20 பேருக்கு தலா ஒரு கோடியும், 3-வது பரிசாக ரூ50 லட்சம் என தொடங்கி ரூ500 வரை லாட்டரி டிக்கெட்டுக்களுக்கு பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 25 கோடி பரிசுத்தொகையில், டிக்கெட் விற்பனை செய்த நாகராஜனுக்கு 10 சதவீதம், 2.5 கோடியும், 30 சதவீதம் வரி என்பதால், 6.75 கோடி பிடித்தம் செய்யப்பட்டு மீதமுள்ள 15.75 கோடி அவரது வங்கி கணக்கில் செலுத்தப்படும். அதன்பிறகு, சுகாதாரம் மற்றும் கல்வி வரிகள் 2.85 கோடி வங்கி கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்படும். கடைசியாக 12.8 கோடி வெற்றியாளருக்கு கிடைக்கும். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

lottery
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment