Kerala Lottery Monsoon Bumper BR-98 Result | கேரள மான்சூன் பம்பர் பிஆர்-98 ரிசல்ட் குலுக்கல் இன்று நடைபெறும். கேரள லாட்டரி, மாநில அரசால் லாட்டரி துறை சார்பில் நிர்வகிக்கப்படுகிறது.
இந்நிலையில், மான்சூன் பம்பர் பிஆர்-98 கேரளா லாட்டரி முடிவு 2024 இன்று ஜூலை 31, 2024 அன்று பிற்பகல் 2 மணிக்கு கோர்க்கி பவனில் அறிவிக்கப்படும்.
இந்தக் குலுக்கல், திருவனந்தபுரத்தில் பேக்கரி சந்திப்புக்கு அருகில் நடைபெறும். பரிசு வென்றவர்கள் பரிசுகளைப் பெற்ற 30 நாட்களுக்குள் தங்களின் வெற்றிக்கான டிக்கெட்டுகளை ஒப்படைக்க வேண்டும்.
மேலும், கேரள அரசின் கெஜட்டில் வெளியிடப்பட்ட முடிவுகளுடன் தங்கள் வெற்றி எண்களை உறுதிசெய்ய பரிந்துரைக்கப்படுகிறது.
பரிசு விவரம்
- முதல் பரிசு: ரூ. 10 கோடி
- 2வது பரிசு: ரூ. 10 லட்சம்
- 3வது பரிசு: ரூ. 5 லட்சம்
- ஆறுதல் பரிசு: ரூ. 1 லட்சம்
- 4வது பரிசு: ரூ. 3 லட்சம்
- 5வது பரிசு: ரூ. 5,000
- 6வது பரிசு: ரூ. 1,000
- 7வது பரிசு: ரூ. 500
- 8வது பரிசு: ரூ. 250
மான்சூன் பம்பர் லாட்டரி சீட்டில் ஒன்பது பரிசுகளும், ஆறுதல் பரிசும் உண்டு. முதல் பரிசாக 10 கோடி ரூபாயும், இரண்டாவது மற்றும் மூன்றாம் பரிசாக முறையே 10 லட்சம் மற்றும் 5 லட்சம் ரூபாயும் வழங்கப்படும்.
முதல் பரிசு முதல் ஏழாவது பரிசு வரை 15% கழித்து வெற்றி பெற்ற சீட்டுகளை விற்கும் முகவர்களுக்கு லாட்டரி ஏஜென்சி பணத்தை வழங்கும். எட்டாவது மற்றும் ஆறுதல் பரிசுகளுக்கான பரிசுத் தொகையில் (ஏஜென்ட் கமிஷன்) 20% அரசு ஒதுக்கிய நிதியில் இருந்து வரும்.
6 பம்பர் லாட்டரிகளில், மான்சூன் பம்பர் ஒன்று. ஒவ்வொரு ஆண்டும், மான்சூன் பம்பர் லாட்டரி குலுக்கல் நடக்கும். ஒவ்வொரு லாட்டரியும் அதைக் குறிக்க ஒரு அகரவரிசைக் குறியீடு உள்ளது. மான்சூன் பம்பர் லாட்டரி குறியீடு BR ஆகும்.
லாட்டரி முடிவுகளை ஆன்லைனில் பார்ப்பது எப்படி?
- கேரள லாட்டரி keralalotteriesresults.in அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
- லாட்டரி ரிசல்ட் என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.
- புதிய பக்கம் ஒன்று தோன்றும். அதில் வியூ (View) என்பதை கிளிக் செய்யவும்.
- பதிவிறக்கு (டவுன்லோடு-Download) என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
(Disclaimer: லாட்டரி விளையாட்டு ஒருவரை அடிமையாக்கும். நிதி இழப்பை ஏற்படுத்தும் அபாயம் கொண்டது. இதில் பொறுப்புடன் விளையாட வேண்டும். மேலும், இந்தத் தரவுகள் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளன. இதனை எக்காரணம் கொண்டும் ஊக்கமாக கருதக்கூடாது. லாட்டரியை தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் விளம்பர படுத்தவில்லை)
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“