Advertisment

கேரள லாட்டரி குலுக்கல் திடீர் நிறுத்தம்; என்ன காரணம்?

Kerala Lottery Nirmal NR-377 | கேரள லாட்டரியின் நிர்மல் என்.ஆர். 377 குலுக்கல் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு காரணமாக இன்று நிறுத்தப்பட்டது. கேரளத்தில் 2ம் கட்டமாக ஏப்.26ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

author-image
WebDesk
New Update
Lottery, Lottery result, Lottery result bhutan, Lottery result lucky win

Kerala Lottery Nirmal NR-377 | கேரள லாட்டரி குலுக்கல் நிர்மல் என்.ஆர் 377 இன்று நிறுத்தப்பட்டது. இதற்கான முடிவுகள் நாளை (ஏப்.27,2024) அறிவிக்கப்பட உள்ளன.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Kerala Lottery Nirmal NR-377 Draw | மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு காரணமாக, கேரள மாநில லாட்டரித் துறை மாநிலத்தில் நடந்து வரும்  நிர்மல் என்ஆர்-377 அதிர்ஷ்டக் குலுக்கல் முடிவுகளின் அறிவிப்பை ஏப்ரல் 26 வெள்ளிக்கிழமையில் இருந்து ஏப்ரல் 27 சனிக்கிழமைக்கு மாற்றியமைத்துள்ளது.

Advertisment

மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு

இன்று, கேரளாவில் உள்ள 20 நாடாளுமன்ற தொகுதிகளிலும் இரண்டாம் கட்ட தேர்தலில் ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. இந்த சிறப்பு லாட்டரி குலுக்கல் திருவனந்தபுரத்தில் பேக்கரி சந்திப்பு அருகே உள்ள கோர்க்கி பவனில் மாலை 3 மணிக்கு நடைபெற்றுவந்தது.

இந்தக் குலுக்கலில் முதல் இடத்தைப் பெறுபவருக்கு ரூ. 70 லட்சமும், இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பெறுபவர்கள் முறையே ரூ. 10 லட்சம் மற்றும் ரூ. 1 லட்சமும் பெறுகிறார்கள்.

பரிசு விவரம்

  • முதல் பரிசு: ரூ 70 லட்சம்
  • 2வது பரிசு: ரூ.10 லட்சம்
  • 3வது பரிசு: ரூ. 1 லட்சம்
  • 4வது பரிசு: ரூ.5,000
  • 5வது பரிசு: ரூ 1,000
  • 6வது பரிசு: ரூ 500
  • 7வது பரிசு: ரூ 100
  • ஆறுதல் பரிசு: ரூ.8,000

keralalottery.info என்ற கேரள லாட்டரி துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடுவதன் மூலம் நிர்மல் NR-377 லாட்டரியின் முடிவுகளைக் காணலாம். மாற்றாக, நீங்கள் கேரள அரசாங்க அரசிதழில் டிக்கெட் எண்களை சரிபார்க்கலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Kerala lottery
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment