Kerala Lottery Result | கேரள லாட்டரி வின் வின் டபிள்யூ.772 க்கான முடிவுகள் இன்று ஜூன் 03, 2024 பிற்பகல் 3:00 மணிக்கு அறிவிக்கப்படும். இன்றைய கேரள லாட்டரி முடிவுக்கான நேரடி முடிவுகள் பிற்பகல் 3:00 மணிக்குத் தொடங்கும், மேலும் அதிகாரப்பூர்வ முடிவுகள் மாலை 4:00 மணிக்கு வெளியிடப்படும்.
பரிசு விவரம்
இந்த லாட்டரி குலுக்கல் திருவனந்தபுரம் பாளையத்தில் உள்ள பேக்கரி சந்திப்புக்கு அருகில் உள்ள கோர்க்கி பவனில் நடைபெறும். இதில் முதல் பரிசாக ரூ.80 லட்சம் வழங்கப்படும். ஆறுதல் பரிசு ரூ.8 ஆயிரம் ஆகும். இரண்டாம் பரிசாக ரூ.10 லட்சமும், 3ம் பரிசாக ரூ.1 லட்சமும், 4ம் பரிசாக ரூ.5 ஆயிரமும், 5ம் பரிசா ரூ.1,000ம், 6ம் பரிசாக ரூ.500ம், 7ம் பரிசாக ரூ.100ம் வழங்கப்படும்.
மேலும், லாட்டரி முடிவுகள் கேரள மாநில லாட்டரித் துறையால் அதன் அதிகாரப்பூர்வ இணையதளமான keralalotteriesresults.in இல் அறிவிக்கப்படும். லாட்டரி வெற்றியாளர்கள் தங்கள் டிக்கெட்டுகளை நிறுவனத்திற்கு 30 நாள்களுக்குள் திரும்ப ஒப்படைக்க வேண்டும்.
லாட்டரி முடிவுகள்
கேரள லாட்டரி அதன் நம்பகமான மற்றும் வெளிப்படையான நடைமுறைகளுக்காக பரவலாக அறியப்படுகிறது மற்றும் பாராட்டப்படுகிறது. லாட்டரி குலுக்கல் நீதிபதிகள் மற்றும் பொது அதிகாரிகள் குழு முன்னிலையில் நடத்தப்படுகிறது.
இது மிகவும் நேர்மை மற்றும் பாரபட்சமற்ற தன்மையை உறுதி செய்கிறது. முடிவுகள் பின்னர் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் பல்வேறு செய்தித்தாள்களில் கிடைக்கின்றன, எந்த சந்தேகங்களுக்கும் தெளிவற்ற தன்மைக்கும் இடமளிக்காது. எனினும் லாட்டரி நிதி அபாயத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. ஆகவே இதில் பொறுப்புடன் விளையாடுவது நல்லது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“