கேரள லாட்டரி: பாக்யதாரா BT 6 - ரூ. 1 கோடி பரிசு யாருக்கு? முழு விவரம் இதோ

முதல் பரிசை வெல்லும் நபருக்கு ரூ. 1 கோடி கிடைக்கும். அதே சமயம், இரண்டாவது மற்றும் மூன்றாவது பரிசுகள் முறையே ரூ. 75 லட்சம் மற்றும் ரூ. 1 லட்சம் ஆகும்.

முதல் பரிசை வெல்லும் நபருக்கு ரூ. 1 கோடி கிடைக்கும். அதே சமயம், இரண்டாவது மற்றும் மூன்றாவது பரிசுகள் முறையே ரூ. 75 லட்சம் மற்றும் ரூ. 1 லட்சம் ஆகும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
KL Lottery

கேரள மாநில லாட்டரித் துறை, பாக்யதாரா BT-6 லாட்டரி குலுக்கல் முடிவுகளை இன்று (ஜூன் 9, 2025) அறிவிக்க உள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள பேக்கரி சந்திப்புக்கு அருகே கோர்க்கி பவனில் இன்று பிற்பகல் 3 மணியளவில் குலுக்கல் நடைபெறும். முதல் பரிசை வெல்லும் நபருக்கு ரூ. 1 கோடி கிடைக்கும். அதே சமயம், இரண்டாவது மற்றும் மூன்றாவது பரிசுகள் முறையே ரூ. 75 லட்சம் மற்றும் ரூ. 1 லட்சம் ஆகும். நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக, ஒரு சுயாதீன நீதிபதிகள் குழுவின் மேற்பார்வையில் குலுக்கல் நடத்தப்படும். பிற்பகல் 3 மணி முதல் கேரளா லாட்டரியின் நேரடி அறிவிப்புகளையும், வெற்றிபெறும் எண்களின் முழு பட்டியலையும் இங்கே சரிபார்க்கலாம்.

Advertisment

பாக்யதாரா BT-6 லாட்டரி: பரிசு விவரம்

முதல் பரிசு: ரூ. 1 கோடி,
இரண்டாம் பரிசு: ரூ. 75 லட்சம்,
மூன்றாம் பரிசு: ரூ. 1 லட்சம்,
நான்காம் பரிசு: ரூ. 5,000,
ஐந்தாம் பரிசு: ரூ. 1,000,
ஆறாம் பரிசு: ரூ. 500,
ஏழாம் பரிசு: ரூ. 100,
எட்டாம் பரிசு: ரூ. 50 மற்றும்
ஆறுதல் பரிசு: ரூ. 5,000

முடிவுகளை சரிபார்ப்பது எப்படி?

Advertisment
Advertisements

பாக்யதாரா BT-6 லாட்டரி குலுக்கல் முடிவுகளை, கேரள அரசு கெஜட் அலுவலகத்தில் நேரில் பார்வையிட்டு சரிபார்க்கலாம். இதேபோல், கேரளா லாட்டரித் துறையின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.keralalottery.info மூலம் ஆன்லைனிலும் வெற்றிபெறும் எண்களின் பட்டியலை பார்க்கலாம்.

பரிசுத் தொகையை எவ்வாறு பெறுவது?

கேரள அரசால் வெளியிடப்பட்ட வெற்றியாளர்களின் அதிகாரப்பூர்வ பட்டியலுடன் உங்கள் டிக்கெட் எண்ணை சரிபார்க்கவும்.

உங்கள் டிக்கெட் எண் பட்டியலில் இருந்தால், நீங்கள் அதற்கான ரொக்க பரிசைக் கோர தகுதியுடையவர்.

முடிவு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் உங்கள் பரிசை பெறுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

உங்கள் பரிசு தொகையை பெற திருவனந்தபுரத்தில் உள்ள கேரளா லாட்டரி அலுவலகத்திற்குச் செல்லவும்.

சரிபார்ப்புக்காக அசல் லாட்டரி டிக்கெட்டுடன் அடையாளச் சான்றுகளை எடுத்துச் செல்லவும்.

பரிசு தொகையை பெற தேவையான ஆவணங்கள்:

லாட்டரி டிக்கெட்டின் சுய சான்றளிக்கப்பட்ட நகல் (முன் மற்றும் பின் இருபுறமும்).

அரசு அதிகாரி கையொப்பமிட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.

உங்கள் பான் கார்டின் சுய சான்றளிக்கப்பட்ட நகல்.

ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு மற்றும் பான் கார்டு போன்ற அடையாளச் சான்றுகளின் நகல்கள்.

வருவாய் முத்திரை ஒட்டப்பட்ட பரிசு கோரிக்கை படிவம்.

வெற்றிபெறும் எண்களின் முழு பட்டியலுடன் பி.டி.எஃப்-ஐ எவ்வாறு பதிவிறக்குவது?

அதிகாரப்பூர்வ கேரளா லாட்டரி வலைதளங்களை பார்வையிடவும்: 

www.keralalotteries.info அல்லது www.keralalotteryresult.net-ல் பாக்யதாரா BT-6 லாட்டரி முடிவுகளுக்கான இணைப்பைக் கண்டறிந்து கிளிக் செய்யவும்.

வெற்றிபெறும் எண்களின் பட்டியல் திரையில் காட்டப்படும்.

இதன் முடிவுகளை பி.டி.எஃப் வடிவத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.

முக்கிய பரிசுகளை வென்ற எண்கள்:

முதல் பரிசு ரூ. 1 கோடி - BO 420044

இரண்டாம் பரிசு ரூ. 75 லட்சம் - BW 419096

மூன்றாம் பரிசு ரூ. 1 லட்சம் - BN 454940, BO 333592, BP 823451, BR 310376, BS 468746, BT 308741, BU 178240, BV 576790, BW 209062, BX 524272, BY 107217, BZ 440112

முக்கிய துறப்பு: லாட்டரி விளையாட்டு ஒருவரை அடிமையாக்கும். நிதி இழப்பை ஏற்படுத்தும் அபாயம் கொண்டது. இதில் பொறுப்புடன் விளையாட வேண்டும். மேலும், இந்தத் தரவுகள் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளன. இதனை எக்காரணம் கொண்டும் ஊக்கமாக கருதக்கூடாது. லாட்டரியை தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் விளம்பர படுத்தவில்லை
lottery

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: