கேரள மாநில லாட்டரி துறை இன்று (ஜூன் 6, 2025) சுவர்ண கேரளம் SK-6 அதிர்ஷ்ட குலுக்கலுக்கான முடிவுகளை அறிவித்துள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள பேக்கரி சந்திப்புக்கு அருகில் இருக்கும் கோர்க்கி பவனில் இன்று மாலை 3 மணிக்கு சுவர்ண கேரளம் SK-6 அதிர்ஷ்ட குலுக்கல் நடைபெற்றது.
கேரள லாட்டரி என்பது மாநில அரசு நிர்வகிக்கும் ஒரு லாட்டரி அமைப்பாகும். இது தினசரி அதிர்ஷ்ட குலுக்கல்களை ரொக்கப் பரிசுகளுடன் வழங்குகிறது. கேரளா லாட்டரியில் வின் வின் (Win Win), ஸ்திரீ சக்தி (Sthree Shakti), ஃபிஃப்டி ஃபிஃப்டி (Fifty Fifty), கருண்யா பிளஸ் (Karunya Plus), நிர்மல் (Nirmal) மற்றும் பல வகைகள் உள்ளன. இந்த லாட்டரிகள் வாராந்திர அடிப்படையில் திட்டமிடப்பட்டுள்ளன. கேரள லாட்டரி டிக்கெட்டுகள் மாநிலம் முழுவதும் கிடைக்கின்றன.
முடிவுகளை சரிபார்க்கும் வழிமுறை:
அதிகாரப்பூர்வ இணையதளமான, http://www.keralalottery.info/-ஐ பார்வையிடலாம். மேலும், அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் நேரடி ஒளிபரப்பைப் பார்க்கலாம்.
பி.டி.எஃப் பதிவிறக்கம் செய்வது எப்படி?
1: கேரள லாட்டரியின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களான keralalotteries.info அல்லது keralalotteryresult.net ஐப் பார்வையிடவும்.
2: முடிவுகளுக்கான இணைப்பைக் கிளிக் செய்யவும்.
3: வெற்றி பெற்ற எண்களின் முழு பட்டியல் அதில் காண்பிக்கப்படும்.
4: வலைப்பக்கத்தில் பதிவிறக்க இணைப்பை கண்டறிந்து கிளிக் செய்யவும்.
முடிவுகளை சரிபார்க்கும் முறை:
கேரள லாட்டரி சுவர்ண கேரளம் SK-6 அதிர்ஷ்ட குலுக்கலுக்கான முடிவுகளை சரிபார்க்க இரண்டு வழிகள் உள்ளன. கேரள லாட்டரி அலுவலகத்திற்கு நேரில் செல்லலாம் அல்லது கேரள லாட்டரித் துறையின் அதிகாரப்பூர்வ வலைதளமான keralalottery.info ஐ பார்வையிடலாம்.
வெற்றி பெற்ற எண்கள்:
முதல் பரிசு: ரூ. 1 கோடி ஜாக்பாட்
வென்ற எண்: RP 133796
இரண்டாம் பரிசு: ரூ. 30 லட்சம்
வென்ற எண்: RO 449657
மூன்றாம் பரிசு: ரூ. 25 லட்சம்
வென்ற எண்: RT 603521
முக்கிய குறிப்பு: லாட்டரி விளையாட்டு ஒருவரை அடிமையாக்கும். நிதி இழப்பை ஏற்படுத்தும் அபாயம் கொண்டது. இதில் பொறுப்புடன் விளையாட வேண்டும். மேலும், இந்தத் தரவுகள் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளன. இதனை எக்காரணம் கொண்டும் ஊக்கமாக கருதக்கூடாது. லாட்டரியை தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் விளம்பர படுத்தவில்லை