P Vaidyanathan Iyer
Key sales numbers show rural demand may dip further : ஜூலை 2017ம் ஆண்டு முதல் ஜூன் 2018ம் ஆண்டு வரை 'இந்தியாவில் வீட்டு நுகர்வோர் செலவு’ (household consumption expenditure) என்ற பெயரில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. ஆனால் இந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்து பொருளாதார நிலைமை மேலும் சீரழிய துவங்கியுள்ளது. இந்திய பொருளாதாரம் மேலும் பாதாளம் நோக்கி நகரும் என்று பொருளாதார வல்லுநர்கள் அறிவித்துள்ளனர்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழ் இந்த வீழ்ச்சி குறைத்து பல்வேறு துறைசார் வல்லுநர்களுடன் கலந்து ஆலோசனை மேற்கொண்டது. எஃப்.எம்.சி.ஜி, ட்ராக்டர்கள், இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றின் விற்பனை மிகவும் குறைந்துள்ளது. மேலும் தங்கத்தின் இறக்குமதியும் இந்த நான்கு மாதங்களில் மிகவும் குறைவாக இருப்பதும் இந்த பொருட்களின் தேவை குறைந்திருப்பதை சுட்டிக்காட்டுகிறது.
கிராமப்புற தொழிலாளர்களின் நுகர்வோர் விலைக் குறையீடும் குறைந்துள்ளது. கிராமப்புறங்களில் மக்களின் ஊதியங்கள் குறைந்து வருகிறது. மார்ச் மாதத்தில் இருந்து சி.பி.ஐ விகிதம் அதிகரித்து வருவதால் ஊதியங்கள் மிகவும் குறைந்து வருகிறது. சிபிஐ-ஆர்எல் 6.23%த்துடன் கூடிய ஆகஸ்ட் மாத ஊதியம்3.4% அதிகரித்திருந்தாலும், உண்மையான ஊதியம் 2.83% குறைந்துவிட்டது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்ட்ரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் தாமதமாக துவங்கிய பருவமழை விவசாய வருமானத்தை மிகவும் குறைத்துள்ளது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
வருடத்திற்கு 5 முதல் 8 மில்லியன் மக்கள் கிராமப்புறங்களில் இருந்து நகர்புறங்கள் நோக்கி வருகின்றனர். மேலும் குறைவான அல்லது போதுமான முதலீடு இல்லாமல் இருப்பதால் வருமானமும் மிகவும் குறைவாக இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் அறிவிக்கின்றனர். சிலர் மீண்டும் கிராமங்களுக்கு வருவதையே விரும்புகின்றனர். மேலும் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ”விவசாயம் சாரா” தொழில்களுக்கான வாய்ப்புகளும் மிகவும் குறைந்துள்ளது என்று பொருளாதார நிபுணர்கள் அறிவிக்கின்றனர்.
'ஃபாஸ்ட் மூவிங் கன்ஸ்யூமர் குட்ஸ்’ நிறுவனம் ஒன்றின் மூத்த தலைவர் ஒருவர் குறிப்பிடுகையில் சில ஊரக நுகர்வோர்கள் காத்துக் கொண்டிருந்தனர் நிலைமை சரியாகிவிடும் என்று. 2016 பண மதிப்பிழக்க நீக்கம் மற்றும் 2017ம் ஆண்டு ஜி.எஸ்.டி என இரண்டு பெரிய நிகழ்வுகளுக்கு பிறகும் 2018ம் ஆண்டு நிலைமை சரியாகும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் குறைக்கப்பட்ட ஜி.எஸ்.டியால் மிகப்பெரிய கம்பெனிகள் மட்டுமே பலனடைந்தன. 2018ம் ஆண்டு இந்துஸ்தான் யுனிலீவர் லிமிட்டட் விற்பனை மட்டும் 14 முதல் 15% வரை உயர்ந்துள்ளது.
2019ம் ஆண்டு கிராமப்புற தேவைகள் மிகவும் குறையத் துவங்கின. நகர்புறங்களைக் காட்டிலும் 1.4 முதல் 1.5% வரையில் தேவைகள் அதிகமாக இருக்கும். இவை அனைத்தும் மார்ச் மாதம், 2019 வரை தொடர்ந்து கொண்டே இருந்தது. ஜூன் மாத முடிவில் கிராமப்புறங்களும் நகர்ப்புறங்களை போன்று தேவைகளை குறைத்துக் கொண்டது. இரண்டும் ஒரே சீரான வேகத்தில் தற்போது தேவைகளை குறைத்து கொண்டிருக்கிறது. கிராமப்புற பொருளாதாரம் நகர்புற பொருளாதாரத்தை விட பாதியாக குறைந்துள்ளது.
மொத்த எஃப்.எம்.சி.ஜி சந்தையில் சுமார் 38-40 சதவீதம் கிராமப்புற இந்தியாவின் பங்கு. "பெரிய நகரங்கள் மற்றும் பெருநகரங்களை விட கிராமப்புற இந்தியாவில் மந்தநிலை மிகவும் எளிமையாக கவனிக்கத்தக்க வகையில் இருக்கிறது. நகர்ப்புற பிரிவு 10 சதவீதமாக வளர்ந்து கொண்டிருந்தால், கிராமப்புறம் ஐந்து சதவீதமாக வளர்ந்து வருகிறது… மேலும் இது 3-4 சதவீதமாகக் குறையக்கூடும். சிறிய டிக்கெட் வாங்குவதை கூட மக்கள் ஒத்திவைக்கின்றனர். அடுத்த மூன்று-ஆறு மாதங்களில் விஷயங்கள் மோசமடைவதைக் காண்கிறோம். கிராமப்புற எஃப்.எம்.சி.ஜி விற்பனை இன்னும் வீழ்ச்சியடையவில்லை, ”என்று ஒரு உயர் எஃப்எம்சிஜி நிறுவனத்துடன் மற்றொரு நிர்வாகி கூறினார்.
பயிர்களுக்கான ஆதரவு விலை உயர்த்து அறிவிக்கப்பட்டால் கிராமப்புறங்களில் ஆட்டோமொபைல் விற்பனை உயர வாய்ப்புகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டது. மேலும் ட்ராக்டர்கள், இருசக்கர வாகனங்களின் விற்பனை அக்டோபரில் கொஞ்சம் அதிகரித்து இருப்பதால் இந்த துறை கொஞ்சம் நம்பிக்கை அளிப்பதாக அறிவிக்கின்றனர்.
உள்நாட்டு டிராக்டர் விற்பனை 2019-20 நிதியாண்டின் முதல் எட்டு மாதங்களில் குறைந்துள்ளது. இந்த பிரிவில் 40 சதவீத பங்கைக் கொண்ட மிகப்பெரிய நிறுவனமான மஹிந்திராவைப் பொறுத்தவரை, ஏப்ரல் 2019 முதல் ஒவ்வொரு ஐந்து மாதங்களிலும் விற்பனை முந்தைய ஆண்டின் இதே மாதங்களை விட குறைவாக இருந்தது. இது ஏப்ரல் மாதத்தில் 8 சதவீதமும், மே மாதத்தில் 17 சதவீதமும், ஜூன் மாதத்தில் 19 சதவீதமும், ஜூலை மாதத்தில் 11 சதவீதமும் ஆகஸ்டில் 15 சதவீதமும் சரிந்தது.
செப்டம்பர் மாதம் உள்நாட்டு விற்பனை ஓரளவுக்கு உயர்ந்தது. விவசாயம் மற்றும் பருவமழை காரணமாக இந்த விற்பனை நிலை உயரும் என்று கணிக்கப்பட்ட போது அக்டோபரில் சரிவை நோக்கி அவை நகர்ந்தது. அக்டோபர் மாதத்தில் ட்ராக்டர்களின் விற்பனை 4% அல்லது 2000 யூனிட்டுகள் குறைந்தது. ஆனால் 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17% விற்பனை அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அக்டோபர் மாதத்தில் 12.84 லட்சம் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து புதிய சாதனையையே படைத்திருக்கிறது ஹீரோ மோட்டோகார்ப். ஆனால் நவம்பர் மாதத்தில் வெறும் 5.99 லட்சம் இருசக்கர வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் இது 18.43% குறைவாகும். இரு சக்கர வாகன சந்தையில் கிட்டத்தட்ட 46 சதவீத பங்கைக் கொண்ட ஹீரோ மோட்டோகார்ப், 2019-20 நிதி ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் விற்பனையில் தொடர்ந்து சரிவைக் கண்டது. மே தவிர, இது 7.7 சதவீதமாக குறைந்தது. விற்பனை இரட்டை இலக்கங்களில் சரியத்துவங்கின. பஜாஜ் ஆட்டோ மற்றும் டி.வி.எஸ், மற்ற இரண்டு பெரிய நிறுவனங்களும் கூட, அக்டோபரில் விற்பனை சரிவை சந்தித்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.