கிஷான் கிரெடிட் கார்டில் விவசாயிகளின் நலனுடன் தொடர்புடைய ஒரு முக்கிய அம்சம் உள்ளது. அது கடன் பெறும் வசதி ஆகும். இது விவசாயிகளுக்கான அவசர செலவினங்களை பூர்த்தி செய்ய உதவும்.
இது விவசாயிகளுக்கு சிறு கடன்களுக்கான திட்டமாகும். இது முதன்மையாக விவசாயம் தொடர்பான தேவைகளை பூர்த்தி செய்வதாகும். இருப்பினும் கடனின் ஒரு பகுதியை விவசாயிகள் தங்கள் சொந்த தேவைகளுக்காக பயன்படுத்திக்கொள்ளலாம். விவசாயிகள் கடனில் பத்து சதவீதத்தை தங்கள் வீட்டு செலவுக்காக பயன்படுத்திக்கொள்ளலாம்.
இந்திய ரிசர்வ் வங்கி இது தொடர்பான தகவல்களை தனது இணையதளத்தில் விவசாயிகளுக்கான நிதி தகவல்கள் என்ற பிரிவில் பதிவேற்றியுள்ளது.
விவசாயிகள் தங்கள் சொந்த செலவீனங்களுக்கு அதிக தொகையை பயன்படுத்த வேண்டாம் என்று வங்கி அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர். இந்தக் கட்டுபாடானது விவசாயிகள் வருமானம் ஈட்டுவதற்கும் கடனை திருப்பிச் செலுத்துவதற்கும் ஏதுவாக அமையும்.
ரிசர்வ் வங்கி சமீபத்தில் வங்கிகளுக்கு ஒரு அறிவுரை வழங்கியுள்ளது. மார்ச் 1,2020 முதல் மே 31,2020 வரை விவசாய கடன்களுக்கான இரண்டு சதவீத வட்டி வழங்கலை நீட்டிக்க கோரியும், அதிகபட்சம் மூன்று லட்சம் வரையிலான குறுகிய கால கடன்களுக்கான திருப்பிச் செலுத்தும்போது வழங்கப்படும் 3 சதவீத ஊக்கத்தொகையிலும் கவனம் செலுத்த அறிவுறுத்தியுள்ளது.
முன்னதாக கிஷான் கார்டு திட்டமானது விவசாயிகளுக்கு மட்டுமே இருந்தது. இப்போது மத்திய அரசு கால்நடை வளர்ப்போர்க்கும் பால் உற்பத்தி செய்வோருக்கும் இத்திட்டத்தை நீட்டித்து மேம்படுத்தியுள்ளது.
கே.சி.சி மூலம் எடுக்கப்பட்ட 3 லட்சம் வரையிலான கடன்களின் வட்டிவிகிதம் 9% ஆகும். இதற்கு அரசாங்கம் 2% மானியம் வழங்குகிறது. எனவே இது 7% ஆக குறைகிறது. கடனை சரியான நேரத்தில் திருப்பி செலுத்தினால் விவசாயிகளுக்கு 3% கூடுதல் தள்ளுபடி கிடைக்கும். எனவே வட்டிவிகிதம் 4% மட்டுமே.
இத்திட்டத்தின் கீழ் பிரதான் மந்திரி கிஷான் சம்மன் நிதி திட்டத்தின் பயனையும் பெறலாம். மத்திய அரசிடமிருந்து இத்திட்டம் மூலம் ரூ.1.60 லட்சம் வரை கடன் பெறலாம். கடனை சரியாக திருப்பிச் செலுத்துவதால் எதிர்காலத்தில் கடன் பெறுவதில் எந்த சிக்கலும் இருக்காது. இத்திட்டம் 1998 ல் தொடங்கப்பட்டது. இத்திட்டம் இந்தியாவில் 14 கோடி விவசாயிகளுக்கு பலன் தந்து கொண்டிருக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil