கிசான் கிரெடிட் கார்டு (KCC) திட்டமானது விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் கடன் கிடைக்க வழிவகை செய்யும் மத்திய அரசின் திட்டமாகும். இது 1998இல் விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான தேசிய வங்கியால் (நபார்டு) உருவாக்கப்பட்டது.
பிஎம் கிசான் கிரெடிட் கார்டுகள் இப்போது பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா (பிஎம் கிசான்) உடன் இணைக்கப்பட்டுள்ளன. கிரெடிட் கார்டை பயன்படுத்தி விவசாயிகள் 4 சதவீத வட்டி விகிதத்தில் ரூ.3 லட்சம் வரை கடன் தொகை பெறலாம். இந்த கார்டிற்கு PM Kisan பயனாளிகள் எளிதாக விண்ணப்பித்து பெறலாம்.
PIB வெளியிட்ட தகவலின்படி, 2 கோடிக்கும் அதிகமான கிசான் கிரெடிட் கார்டுகள் கொரோனா காலத்தில் வழங்கப்பட்டன. வற்றில் பெரும்பாலானோர் சிறு விவசாயிகள் ஆகும். நாட்டில் வரவிருக்கும் விவசாய உள்கட்டமைப்பு மற்றும் இணைப்பு உள்கட்டமைப்புகளால் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், கிசான் கிரெடிட் கார்ட் மூலம் வங்கிகள் வழங்கும் வழக்கமான கடன்களின் அதிக வட்டி விகிதங்களில் இருந்து விவசாயிகளுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம், விவசாயிகள் கடனைத் தங்கள் பயிர் அறுவடை காலத்தைப் பொறுத்து திருப்பிச் செலுத்தலாம்.
ஸ்டேட் பேங்க ஆஃப் இந்தியா மூலம் இந்த கிசான் கிரெடிட் கார்டை விவசாயிகள் பெறலாம். இதற்கு வங்கிக்கு நேராக வர வேண்டிய அவசியமில்லை. எஸ்பிஐயின் YONO செயலி மூலம் விண்ணப்பித்து எளிதாக பெற்றுக்கொள்ளாலம்.
கிசான் கிரெடிட் கார்ட் அப்ளை செய்யும் முறை
Step 1: முதலில் எஸ்பிஐ YONO செயலி பதிவிறக்கம் செய்து, லாகின் செய்ய வேண்டும்
Step 2: அடுத்து, செயலிக்குள் Yono Krishi என்பதற்குள் செல்ல வேண்டும்.
Step 3 : பின்னர், அதில் khata என்பதை கிளிக் செய்யவும்.
Step 4: அடுத்ததாக KCC review பிரிவிற்கு சென்று அப்ளை கொடுக்க வேண்டும்.
அவ்வளவு தான், 4 ஸ்டெப்ஸில் எளிதாக கிரெடிட் கார்டிற்கு அப்ளை செய்து பெற்றுவிடலாம். ஸ்மார்ட்போன் இல்லாதவர்கள், வங்கிக்கு நேரடியாக சென்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, நில ஆவணங்கள் மற்றும் பயிர் விவரங்களை சமர்பிக்க வேண்டும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil