Kisan Vikas Patra (KVP) Interest Rate: போஸ்ட் ஆபிஸில் பல்வேறு முதலீட்டு திட்டங்கள் உள்ளன. இந்தத் திட்டங்கள் பாதுகாப்பானதாக இருப்பதோடு, நல்ல வருமானத்தையும் வழங்குகின்றன.
அந்த வகையில் கேபிவி எனப்படும் கிஷான் விகாஷ் பத்ரா திட்டம் ஆண் குழந்தைகளின் செல்வ மகன் சேமிப்பு திட்டம் எனக் கூறப்படுகிறது.
இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு காலாண்டு முடிவிலும் வட்டி நிர்ணயிக்கப்படும். அந்த வகையில் 2023ல் ஜூலை-செப்டம்பர் காலாண்டு வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்தத் திட்டத்தில் 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இதனால் உங்கள் பணம் சரியாக 9 ஆண்டுகள் 7 மாதத்தில் இரட்டிப்பு ஆகும். அதாவது 115 மாதங்களில் நமது முதலீடு இரண்டாக பெருகிவிடும்.
ரூ.1000 முதலீட்டில் இத்திட்டத்தினை தொடங்கலாம். அதேபோல், 100ன் மடங்களில் முதலீடு செய்யலாம். ரிசர்வ் வங்கி ரெப்போ விகித உயர்வை இடைநிறுத்தியதால் பணவீக்கம் கட்டுப்பாட்டில் இருப்பதாகத் தெரிகிறது, இன்று கேவிபி கணக்கு வட்டி விகிதத்தை மேலும் உயர்த்துவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
மேலும், கிசான் விகாஸ் பத்ரா உள்ளிட்ட சிறு சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதங்கள் அரசுப் பத்திரங்களின் (ஜி-செக்) விளைச்சலுடன் இணைக்கப்பட்டுள்ளன.
நிதி அமைச்சகம் ஒரு நிதியாண்டின் ஒவ்வொரு காலாண்டிலும் கேவிபி போன்ற சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களை மதிப்பாய்வு செய்கிறது. முந்தைய மூன்று மாதங்களின் G-Secs விளைச்சல்களின் அடிப்படையில் மதிப்பாய்வு செய்யப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“