Kisan Vikas Patra scheme offers 6.9 pct interest : நம்முடைய பணத்தை எப்படி முதலீடு செய்து எவ்வாறு அதனை லாபகரமாக திருப்பி பெறுவது என்ற சிந்தனையே நமக்கு பெரும் சவாலாக இருக்கும். சில நேரங்களில் சந்தையில் முதலீடு செய்வது சரியான பலனை தருமா என்ற யோசனை பலரை அச்சம் கொள்ள வைக்கும். என்ன இருந்தாலும் நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் இல்லையா?
உங்களுக்கு சந்தை அபாயங்கள் குறித்து ஏதேனும் அச்சம் இருந்தால் நீங்கள் சேமிப்பு கணக்கு பக்கமே உங்களின் கவனத்தை திருப்பலாம். இதில் பல நல்ல பலன்கள் நமக்கு கிடைக்கும்.
சிறு சேமிப்பு திட்டங்களில் ஒன்றான கிஷான் விகாஸ் பத்திரம் குறித்து நாம் ஒன்று பார்க்கப் போகின்றோம். அதிக அளவு வட்டியை திரும்ப தரும் சிறு சேமிப்பு திட்டங்களில் ஒன்றாக இந்த கிஷான் விகாஸ் பத்திரம் இருக்கிறது.
கிஷான் விகாஸ் பத்திரம் (Kisan Vikas Patra Scheme) - வட்டி மற்றும் பலன்கள்
தற்போது ஆண்டுக்கு 6.9% வட்டியை ஈட்டுகிறது இந்த சிறு சேமிப்பு திட்டம்
124 மாதங்களில் அதாவது 10 வருடம் நான்கு மாதங்களில் முதலீடு செய்யப்பட்ட மதிப்பை விட இருமடங்காகும்.
குறைந்த பட்ச முதலீடாக நீங்கள் ரூ. 1000 செலுத்தலாம். உச்ச வரம்பு இதற்கு கிடையாது.
3 பெரியவர்கள் கூட்டு சேமிப்பு திட்டமாக இதனை துவங்கலாம். சிறுவயதினருக்கு கார்டியன் இதனை துவங்கலாம். 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தங்களின் பெயரிலேயே இந்த சேமிப்பு கணக்கை துவங்கலாம்.
இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் எவ்வளவு கணக்கு வேண்டுமானாலும் துவங்கலாம்.
இந்த சேமிப்பின் மெச்சூரிட்டி நீங்கள் கணக்கு துவங்கும் நாளன்று மத்திய நிதி அமைச்சகத்தின் கொள்கையை பொறுத்தே உறுதியாகும்.
12 முக்கியமான சேமிப்பு திட்டங்களில் மூன்று சேமிப்பு திட்டங்கள் பல நல்ல பலன்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம், பி.பி.எஃப். மற்றும் சுகன்யா சம்ரிதி யோஜனா போன்றவையும் அதில் அடங்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil