ஒரு மாநிலத்தில் இருந்து பல்வேறு மாநிலங்களுக்கு விநியோகம் செய்யும் போது, அம் மாநிலங்களில் பதிவு செய்ய வேண்டியதில்லை. ஆனால், அங்கு ஏதேனும் கிளைகள் இருந்தால், அதற்கு விநியோகம் செய்யும்போது பதிவு செய்ய வேண்டும்.
வருடாந்திர கணக்கை தாக்கல் செய்வது எப்படி?
ஒவ்வொரு பதிவு செய்யப்பட்ட வரிதாரரும் தங்களுடைய வருடாந்திர கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். ஜிஎஸ்டிஆர் 9 என்கிற படிவத்தை பூர்த்தி செய்து அதனை தாக்கல் செய்ய வேண்டும்.
கார், பைக் விலை எப்படி?
தற்பொழுது உள்ள விரி விதிப்பின்படி, நாடு முழுவதும் மோட்டார் வாகனங்களுக்கு 25 சதவீதம் முதல் 55 சதவீதம் வரை விதிக்கப்பட்டு வருகின்றது. ஆட்டோமொபைல் துறை சார்ந்த வாகனங்கள், மோட்டார் சைக்கிள் , தனிநபர் பயன்பாட்டிற்கான ஹெலிகாப்டர்கள், விமானங்கள் மற்றும் சொகுசு படகுகள் போன்றவற்றுக்கு 28 சதவீத வரி பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், சில வாகங்களின் விலை குறையவும், சில வாகனங்களின் விலை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.
கார்களை பொறுத்தவரை, உறுதியான தகவல் இல்லையென்றாலும், 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட 1,200 சிசிக்கும் குறைவான பெட்ரோல் இன்ஜின் கொண்ட சிறிய கார்களின் விலையில் வீழ்ச்சி இருக்கும். எஸ்யூவி ரக கார்களில் வீழ்ச்சி இருக்கும். ஹைபிரிட் கார்கள் விலை உயரும். செடான் ரக கார்களின் விலையில் வீழ்ச்சி இருக்கும் என கூறப்படுகிறது.
அதேபோல், நாடு முழுவதும் இருசக்கர வாகனங்களுக்கு தற்பொழுது 28 முதல் 35 சதவீதம் வரையிலான வரிவிதிப்பு உள்ளது. இந்நிலையில், ஸ்கூட்டர்கள் உட்பட இருசக்கர வாகனங்களுக்கு ஜிஎஸ்டி மூலம் 28 சதவீத வரி விதிக்கப்படவுள்ளது. இருசக்கர வாகனங்கள், ஜிஎஸ்டி-யின் கீழ் 28 சதவீத வரி விதிப்பை பெற்றாலும் மறைமுக வரியில் எந்த மாற்றமும் இருக்காது. ஆனால், 350 சிசி-க்கு மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களுக்கு 3 சதவீதம் கூடுதல் என்பதனால் 31 சதவீத வரியை பெறும். எனவே, இந்த பைக்குகளின் விலை உயரும். அதேசமயம், உதிரிபாகங்களின் வரிவிதிப்பு அதிகரிக்கிறது.