scorecardresearch

ஜிஎஸ்டி என்றால் என்ன? எவ்வாறு அது செயல்படுகிறது?

நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை (ஜிஎஸ்டி) வரி நாளை முதல் அமலுக்கு வரவுள்ள நிலையில், ஜிஎஸ்டி என்றால் என்ன என்று தெரிந்து கொள்வோம்!! ஜிஎஸ்டி என்றால் என்ன? சரக்குகள் மற்றும் சேவைகள் வரி என்பதின் சுருக்கமே ஜிஎஸ்டி. ஜிஎஸ்டியின் மூலமாக வரிக்கு வரி விதிக்கப்படுவது தவிர்க்கப்படுகிறது. ஒரு பொருளை உற்பத்தி செய்து விற்பனைக்குக் கொண்டுவர விற்பனை வரி, சேவை வரி, உற்பத்தி வரி, நுழைவு வரி, கலால் வரி, கல்வித் தீர்வை, வாட் என்பன உள்ளிட்ட […]

ஜிஎஸ்டி என்றால் என்ன? எவ்வாறு அது செயல்படுகிறது?
நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை (ஜிஎஸ்டி) வரி நாளை முதல் அமலுக்கு வரவுள்ள நிலையில், ஜிஎஸ்டி என்றால் என்ன என்று தெரிந்து கொள்வோம்!!

ஜிஎஸ்டி என்றால் என்ன?

சரக்குகள் மற்றும் சேவைகள் வரி என்பதின் சுருக்கமே ஜிஎஸ்டி. ஜிஎஸ்டியின் மூலமாக வரிக்கு வரி விதிக்கப்படுவது தவிர்க்கப்படுகிறது.

ஒரு பொருளை உற்பத்தி செய்து விற்பனைக்குக் கொண்டுவர விற்பனை வரி, சேவை வரி, உற்பத்தி வரி, நுழைவு வரி, கலால் வரி, கல்வித் தீர்வை, வாட் என்பன உள்ளிட்ட பல வரிகள் விதிக்கப்படுகின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு மாதிரியான வரி விதிப்பு நடைமுறையில் இருக்கிறது. இந்த நிலையில், இதையெல்லாம் தவிர்த்து அனைத்துக்கும் சேர்த்து ஒரு வரி என்பதுதான் சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி.

ஒரு பொருளானது பல நிலைகளைக் கடந்து தயாரிப்பு என்னும் நிலையில் இருந்து இறுதிவிற்பனை என்னும் நிலையை அடையும். ஒவ்வொரு நிலையிலும் வரிச்சுமை அடுத்த நிலைக்குத் திணிக்கப்படுகிறது. ஆகையால் இது வரிக்கு வரிவிதிப்பு என்றாகிறது. ஆனால், ஜிஎஸ்டி-ல் இந்த பிரச்னை இல்லை. ஒரு பொருளுக்கு ஒரு முறை வரி செலுத்திவிட்டால், மீண்டும் அந்த பொருளுக்கு அதிக வரி செலுத்த வேண்டும் என்பது இருக்காது.

ஜிஎஸ்டி எவ்வாறு செயல்படுகிறது?

ஜிஎஸ்டியை மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறைக்கு வரும்போது, 3 வகையான சரக்கு மற்றும் சேவை வரிகள் இருக்கும்.

அவையாவன; மத்திய அரசின் ஜிஎஸ்டி (CGST): வருவாய் மத்திய அரசால் வசூலிக்கப்படும்.

மாநில அரசின் ஜிஎஸ்டி (SGST): மாநிலங்களின் இடையில் நடைபெறும் விற்பனையின் மூலம் வரும் வருவாய் மாநில அரசுகளால் வசூலிக்கப்படும்.

மாநிலங்களுக்கு இடையேயான ஜிஎஸ்டி (IGST): மாநிலங்களுக்கு இடையில் நடைபெறும் விற்பனையின் மூலம் வரும் வருவாய் மத்தியஅரசால் வசூலிக்கப்படும்.

நன்மைகள்:

உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விலை உயர்வு வாய்ப்புகளை தடுக்கவும், பொருட்கள் மற்றும் சேவைகளில் உள்ள வரி லாபம் நுகர்வோரை சென்றடையும் என தெரிகிறது.

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Know about gst what is gst