எல்.ஐ.சி ஆதார் ஷீலா திட்டத்தில் நாளொன்றுக்கு ரூ.87 வீதம் முதலீடு செய்தால் முதிர்ச்சியின்போது ரூ.11 லட்சம் வரை ரிட்டன் கிடைக்கும்.
இந்தியாவின், லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷசன் நிறுவனமான எல்.ஐ.சி குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை பல்வேறு சிறப்பு திட்டங்களை வழங்கிவருகிறது.
அவ்வாறு மகளிருக்கென பிரத்யேகமாக அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம்தான் எல்ஐசி ஆதார் ஷீலா திட்டம். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால் சேமிப்போடு, பாதுகாப்பும் கிடைக்கின்றது.
இதில் 8-55 வரையிலான பெண்கள் முதலீடு செய்யலாம். திட்டத்தின் பிரிமீயம் செலுத்தும் கால அளவு 10 முதல் 20 ஆண்டுகள் ஆகும். மேலும் இந்தத் திட்டத்தில் சரண்டர் மற்றும் கடன் பெற்றுக்கொள்ளும் வசதிகள் உள்ளன.
ரூ.11 லட்சம் பெறுவது எப்படி?
நீங்கள் 15 வயதில் இந்தத் திட்டத்தில் இணைகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். பாலிசி செலுத்தும் காலம் 10 ஆண்டுகள் ஆகும்.
நீங்கள் தினந்தோறும் ரூ.87 சேமித்தால் ஆண்டுக்கு ரூ.31,755 பிரீமியம் செலுத்த வேண்டும்.
பிரீமியம் செலுத்த வேண்டிய காலம் 10 ஆண்டுகள் ஆகும். ஆக நீங்கள் செலுத்த தொகை ரூ.3 லட்சத்து 17 ஆயிரத்து 550 ஆகும். முதிர்ச்சியின்போது உங்களுக்கு ரூ.11 லட்சம் வரை கிடைக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“