பொது, தனியார் மற்றும் ஸ்மால் வங்கிகளைப் போலவே, தபால் நிலையங்களிலும் பல்வேறு வகையான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
இவற்றில், நிலையான வைப்புத் தொகையும் அவற்றில் ஒன்று. இது போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் என்று அழைக்கப்படுகிறது. இந்தத் திட்டம் 1, 2, 3 மற்றும் 5 ஆண்டுகள் காலஅளவை கொண்டது.
இந்த காலஅளவுக்கு ஏற்ப வட்டி விகிதம் மாறுபடும். கால வைப்புத்தொகையில் கிடைக்கும் அதிகபட்ச வட்டி 7.5 சதவீதமாக உள்ளது. இது 5 வருட எஃப்.டி-க்கு பொருந்தும்.
மேலும், போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் அக்கவுண்ட்டை டெபாசிட் செய்த நாளிலிருந்து ஆறு மாதங்கள் முடிவதற்குள் மூட முடியாது.
நீங்கள் 6 மாதங்களுக்குப் பிறகு கணக்கை மூடினால், 1 வருடத்திற்கு முன்பு, சேமிப்புக் கணக்கில் பொருந்தக்கூடிய வட்டி விகிதத்தின்படி முதலீட்டின் மீதான பணத்தைத் திரும்பப் பெறுவீர்கள். அதேநேரத்தில் தற்போது, தபால் அலுவலக சேமிப்புக் கணக்கில் 4 சதவீதம் வட்டி கிடைக்கிறது.
வட்டி விகிதம்
- ஒரு வருட கணக்கு - ஆண்டுக்கு 6.9% வட்டி
- இரண்டு வருட கணக்கு - ஆண்டுக்கு 7.0% வட்டி
- மூன்று வருட கணக்கு - ஆண்டுக்கு 7.0% வட்டி
- ஐந்தாண்டு கணக்கு - ஆண்டுக்கு 7.5%
போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட்டில் குறைந்தபட்சம் ரூ 1000 டெபாசிட் செய்யலாம் மற்றும் அதிகபட்ச வரம்பு இல்லை. கணக்கைத் திறக்கும் போது என்ன வட்டி விகிதம் உள்ளதோ, அதே வட்டி விகிதம் கணக்குக் காலம் முடியும் வரை பொருந்தும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“