போஸ்ட் ஆபிஸ் மாதாந்திர சேமிப்புத் திட்டம் (அஞ்சல் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் 2024) மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
இந்தத் திட்டத்தின் சிறந்த விஷயம் என்னவென்றால், நீங்கள் எந்தத் தொகையை முதலீடு செய்தாலும் அது பாதுகாப்பாக இருக்கும்.
முதலீடு உச்ச வரம்பு
இந்தக் கணக்கை நீங்கள் உங்கள் மனைவி, சகோதரர் அல்லது குடும்ப உறுப்பினருடன் கூட்டாகத் தொடங்கினால், உங்களுக்கான டெபாசிட் வரம்பும் அதிகரிக்கும்.
இதன் மூலம் உங்களுக்கு அதிக பலன் கிடைக்கும். அத்தகைய சூழ்நிலையில், இந்த திட்டத்தின் மூலம் நீங்கள் ரூ.5,55,000 வீட்டில் உட்கார்ந்து சம்பாதிக்கலாம்.
திட்டத்தின் வடிவமைப்பு எப்படி?
தபால் அலுவலக மாதாந்திர சேமிப்புத் திட்டம் ஒரு வைப்புத் திட்டமாகும். இதில், மொத்த தொகை டெபாசிட்டில் ஒவ்வொரு மாதமும் வருமானம் உள்ளது.
இந்தத் திட்டத்தில் தனிநபர் ஒரே கணக்கில் ரூ.9 லட்சம் வரையிலும், கூட்டுக் கணக்கில் ரூ.15 லட்சம் வரையிலும் டெபாசிட் செய்யலாம்.
மாதம் ரூ.9,250 வட்டி பெறுவது எப்படி?
இப்படிப்பட்ட சூழ்நிலையில், நீங்களும் உங்கள் மனைவியும் சேர்ந்து இந்தக் கணக்கைத் தொடங்கினால், வட்டியில் மட்டும் ரூ.5 லட்சத்துக்கு மேல் வருமானம் கிடைக்கும்.
தற்போது தபால் அலுவலக மாதாந்திர சேமிப்புத் திட்டத்தில் 7.4 சதவீத வட்டி கிடைக்கிறது.
அதில் உங்கள் மனைவியுடன் சேர்த்து ரூ.15 லட்சத்தை டெபாசிட் செய்தால், 7.4 சதவீத வட்டியில் ஒவ்வொரு மாதமும் ரூ.9,250 வருமானம் கிடைக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“