LIC Jeevan Kiran Plan 870: லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (எல்ஐசி) 'எல்ஐசி ஜீவன் கிரண்' என்ற புதிய டெர்ம் காப்பீட்டு (Term insurance plan) திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த திட்டம் 18 முதல் 65 வயது வரையிலான நபர்களுக்கு கிடைக்கும். இதில், பாலிசிதாரர்கள் தங்கள் குறிப்பிட்ட நிதி இலக்குகள் மற்றும் தேவைகளின் அடிப்படையில் 10 முதல் 40 ஆண்டுகள் வரையிலான பாலிசி காலத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.
மேலும், பாலிசி காலத்தில் ஒரே பிரீமியம் செலுத்துதல் அல்லது வழக்கமான பிரீமியம் செலுத்துதல் ஆகியவற்றைத் தேர்வுசெய்யும் நெகிழ்வுத்தன்மையும் உள்ளது.
வழக்கமான பிரீமியம் பாலிசிகளுக்கு குறைந்தபட்ச தவணை பிரீமியம் ₹3,000 மற்றும் ஒற்றை பிரீமியம் பாலிசிகளுக்கு ₹30,000 ஆகும்.
பாலிசி காலத்தின் போது பாலிசிதாரரின் மரணம் மற்றும் பாலிசி நடைமுறையில் இருக்கும் பட்சத்தில், வழக்கமான பிரீமியத்திற்கு - வருடாந்திர பிரீமியத்தின் ஏழு மடங்கு அல்லது "மொத்த பிரீமியத்தில்" 105% செலுத்தப்படும்.
ஒற்றை பிரீமியத்திற்கு, இது 125% அல்லது அடிப்படை காப்பீட்டுத் தொகையை விட அதிகமாக இருக்கும்.
எல்ஐசியின் ஜீவன் கிரண் என்பது இணைக்கப்படாத, பங்கேற்காத, தனிநபர், சேமிப்பு, ஆயுள் காப்பீட்டுத் திட்டமாகும். இந்தத் திட்டம் பாலிசி காலத்தின் போது ஆயுள் காப்பீட்டாளர் துரதிர்ஷ்டவசமாக இறந்தால் குடும்பத்திற்கு நிதியுதவி அளிக்கிறது.
மேலும் இந்த முதலீடுக்கு 80சி மற்றும் 10டி பிரிவின் கீழ் வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது. எனினும் இந்தத் திட்டத்தில் கடன் எடுத்துக்கொள்ளும் வசதி கிடையாது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“