உங்கள் பணம் - நீங்கள் எவ்வளவு தொகை வீட்டுக் கடன் பெற முடியும் தெரியுமா?

வீட்டு கடனுக்கு வீட்டு வசதி நிதி நிறுவனங்கள் சம்பளம் வாங்குபவரின் தகுதியை கணக்கிடுவதற்கு அவர்களின் கடந்த ஆறு மாதங்களுக்கான சம்பள சீட்டு (salary slip), சம்பளம் வரவு வைக்கப்படும் வங்கி கணக்கின் அறிக்கை (bank statement), கடந்த இரண்டு வருடங்களுக்கான Form 16 மற்றும் இரண்டு வருடங்களுக்கான 26 AS அறிக்கை, அடையாள ஆதாரத்திற்கான நிரந்தர கணக்கு எண் அட்டை (PAN card), முகவரி சான்றாக ஆதார் அட்டை, கடவுச்சீட்டு மற்றும் ஏற்கனவே உள்ள கடன்கள் மற்றும் அவற்றை திருப்பி செலுத்தியது குறித்தான விவரங்கள் ஆகியவற்றை பார்க்கும்.

SBI Online: அட… இந்த சிரமத்திற்கும் தீர்வு இருக்கிறதா? தெரியாமப் போச்சே!

தகுதி கணக்கீடு

கடந்த ஆறு மாத சராசரி சம்பள வருமானத்தை சம்பள சீட்டுகளின் அடிப்படையில் எடுத்து, தற்போதுள்ள கடன்நிலையை கழிக்கவும். வீட்டு கடன் விண்ணப்பதாரரைச் சார்ந்திருக்கும் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையின் தாக்கத்தை வீட்டு வசதி நிதி நிறுவனங்கள் கருத்தில் கொள்ளும். மாதாந்திர கடன் சேவை கட்டணங்கள் (Monthly Loan Servicing Charges MLSC) வீட்டு கடனை திருப்பி செலுத்த கடன் வாங்குபவர் மாதம்தோறும் பிரித்து வைக்கும் மாத வருமானம் பொதுவாக 65 சதவிகிதமாக இருக்கும். மீதம் உள்ளது வீட்டு செலவுகளை சமாளிப்பதற்கானது. சில வீட்டு வசதி நிறுவனங்கள் 50 சதவிகித MLSC ஐ கருத்தில் கொள்ளும்.

தங்க விதி (The golden rule)

ஒரு நபரின் வயது 30 க்குள் இருந்தால் அவரது வீட்டுக் கடன் தகுதி அதிகரிக்கும். சம்பளம் வாங்கும் ஊழியருக்கு வீட்டுவசதி நிதி நிறுவனங்கள் வழங்கும் அதிகபட்ச கடன்காலம் 30 ஆண்டுகள் ஆகும்.

ஏர்டெல் ரூ2,498 புதிய பிரீபெய்ட் திட்டம்: இது ஜியோ ரூ2,399-ல் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது?

எனவே உங்களது வயது 30 ஆக இருந்தால், நீங்கள் ஓய்வு பெறும் காலம் வரை கடன் திருப்பி செலுத்தும் கால அவகாசத்தை பெறுவீர்கள். இது பொதுவாக 58 ஆண்டுகள் ஆனால் உங்களுக்கு 28 ஆண்டுகள் மட்டுமே கடன் காலம் கிடைக்கும். மேலும் வீட்டுக் கடனின் அதிகபட்ச பதவிக்காலம் காரணமாக, மாதாந்திர ஈ.எம்.ஐ சுமையும் அதிகபட்ச அளவிற்கு குறைக்கப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Business News in Tamil at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close