ஜூலை 1, 2023 முதல், வெளிநாட்டு டூர் பேக்கேஜ்களுக்கு 20 சதவீத டிசிஎஸ் வரி விதிக்கப்படும். தற்போது வெளிநாட்டு டூர் பேக்கேஜ் முன்பதிவு செய்தால் 5 சதவீதம் டிசிஎஸ் செலுத்த வேண்டும்.
எனினும், உங்கள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யும் போது, TCS இல் பணத்தைத் திரும்பப் பெறலாம்.
20 சதவீத டிசிஎஸ் வரியை தவிர்க்கும் வழிகள்
1) சர்வதேச டெபிட் அல்லது கிரெடிட் கார்டின் ரூ.7 லட்சம் வரம்பை பயன்படுத்தவும்.
2) தனியான முன்பதிவு மற்றும் பணம் செலுத்துதல் டிசிஎஸ்- ஐ சேமிக்க உதவும்
3) அதிக டிசிஎஸ்ஸைத் தவிர்க்க ஜூன் 30, 2023க்குள் அந்நியச் செலாவணியை வாங்கவும்.
நீங்கள் விரைவில் ஒரு சர்வதேச பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டால், இந்த புதிய விதியை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
உதாரணமாக, நீங்கள் ஐரோப்பாவிற்கு ரூ.3,00,000 செலவாகும் பயணத்தை முன்பதிவு செய்தால் ரூ.60 ஆயிரம் டிசிஎஸ் வரி செலுத்த வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“