இஸ்ரேல் ஹமாஸ் மோதல் வெடித்ததில் இருந்து தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இரண்டு வாரங்களில், தங்கம் $1820ல் இருந்து $1977க்கு கிட்டத்தட்ட $150 உயர்ந்துள்ளது. தங்கம் 60,600 ஆக உயர்ந்ததால் MCX இல் கூர்மையான நகர்வு காணப்பட்டது.
அதேபோல், கச்சா எண்ணெய்யும் $81ல் இருந்து $90க்கு உயர்ந்தது. இதற்கிடையில், லெபனான் கூட இஸ்ரேலைத் தாக்கத் தொடங்கும் என்பதால் காஸாவில் மருத்துவமனை குண்டுவெடிப்பு மேலும் உறுதியற்ற தன்மையை உருவாக்கியுள்ளது.
இந்த நிலையில் தங்கம் கடந்த இரு வாரங்களில் ஏறக்குறைய 56,500ல் இருந்து 60,600 வரை ஏற்றம் கண்டுள்ளது. சென்னையை பொறுத்தமட்டில் இன்று 2 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.10 அதிகரித்து சவரன் ரூ.45360 ஆக காணப்பட்டது.
வெள்ளி கிராம் ரூ.78.70 ஆக நிர்ணயிக்கப்பட்டு கிலோ வெள்ளி ரூ.78700 ஆக உள்ளது. கடந்த காலங்களில் வெள்ளி கிராம் ரூ.70 வரை காணப்பட்டது.
அந்த வகையில் தற்போது கிராமுக்கு ரூ.8.70 காசுகள் வரை ஏற்றம் கண்டுள்ளது. தங்கமும் அதுபோல் ஒவ்வொரு நாளும் உச்சம் கண்டுவருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“